2௦௦௦ ஆம் ஆண்டு ஏப்ரல் ல் USB 2.௦ அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது USB 3.௦ அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது.
USB 3.௦ வானத்து, அதன் முன்னோடியான USB 2.௦ வை விட 1௦ மடங்கு வேகமாக இயங்குகிறது. Portable மற்றும் வந்தட்டுகளின் செயல்பாட்டில் இவை படு வேகமாக இயங்குவதை நாம் உணரலாம். USB 2.௦ வானது, ஒரு செக்கனில் 480 Mb தகவல்களையே கடத்துகின்றது.
ஆனால், USB 3.௦ ஆனது , ஒரு செக்கனில் 5 Gb தகவல்களை மாற்றுகிறது. இதனால் Usb 2.௦ மூலம் 15 நிமிடங்களில் மேட்கோள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை USB 3.௦ மூலம் ஒரு நிமிடத்தில் மேட்கொள்ளலாம்.
இந்த இரு வகைச் சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும், USB சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வலி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொளினுட்பங்களுக்கிடையே உள்ள முக்கிய வேறுபாடு , தகவல் செல்லும் பாதைதான்.
USB 3.௦ வினால் தகவல்களை அனுப்பும் அதே நேரத்தில் , தகவலைப் பெறவும் முடியும். ஆனால் USB 2.௦ வினால் ஏதேனும் ஒரு திசையில்தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும் . இதனை ஆங்கிலத்தில் "Polling mechanism USB 2" என்றும் "Asynchronous mechanism USB 3" என்றும் கூறுவார்கள்.
அத்துடன் , இந்த முன்னேறிய தொழிநுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களைப் பரிமாற்றிக்கொள்கையில் மிக உதவியாக இருக்கும். மேலும், USB 3.௦ தொழிநுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் USB சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால், அதிக எண்ணிக்கையில் USB போர்ட் கொண்ட USB hub களைப் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.