அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில் தற்போது கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்கக்கூடிய புத்தம் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tobii REX எனப்படும் USB இணைப்பு மூலம் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனமானது மைக்ரோசொப் நிறுவனத்தினால் புதிதாக அண்மையில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
2013ம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் அறிமுகப்படுத்திப்பட்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதியானது 995 அமெரிக்க டொலர்கள் ஆகும்.