இளமை இதோ இதோ பாடலை முந்துமா சிம்புவின் பாடல்?


 img1131230011_1_1

 புத்தாண்டு வந்து விட்டது. என்று சகல கலா வல்லவன் என்ற படத்தில் கமல ஹாசன் நடிக்க எஸ்.பி.பி. இளமை இதோ இதோ… இனிமை இதோ இதோ என்று பாடினாரோ அதுதான் இன்று வரை ஹேப்பி நியூ இயர் பாடலாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு மகாபலிபுரம் படத்திற்காக சிம்பு பாடிய புத்தாண்டு பாடல் கமலஹாஸன் பாடலை ஓரம்கட்டிவிடும் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வினாயக் என்பவது தயாரிப்பில் உருவாகும் மகாபலிபுரம் படத்தை இயக்குபவர் டான் சாண்டி, இவர் பூபதி பாண்டியனின் முன்னாள் உதவியாளர்.

இந்த படத்திற்காக சிம்பு பாடும் பாடல் 2014 முதல் தினமான புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படவுள்ளது.

யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார், முகமூடி, யுத்தம் செய் படத்தின் இசையமைப்பாளர் கே இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.