எங்கே என் தொலைபேசி எங்கே…?

நீங்கள் பயணம் செய்யும் போது அல்லது ஏதாவது கொண்டாட்ட நிகழ்வு இடங்களில் அல்லது இன்ன பிற இடங்களில் உங்கள் கைத் தொலைபேசியை (Android இயங்குதளங்களை கொண்ட) தொலைத்து விட்டீர்களா? இதோ அதற்கு வழி கிடைத்து விட்டது இப்போது. கூகிள் ஆண்டவர் Adroid Device Manager மூலம் உங்கள் தொலைபேசியை கண்டுபிடிக்க அல்லது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வழி செய்துள்ளார்.
எப்படி?
உங்கள் தொலைபேசி உங்களிடம் இல்லை என்று தெரிந்தவுடன் நீங்கள் Adroid Device Manager மூலம் உங்கள் தொலைபேசி எங்க இருக்கு என்று கண்டுபிடித்து உலக படத்தோட பார்க்கலாம். (முக்கிய குறிப்பு - எக்குத் தப்பான இடத்திற்கு போய் தொலைத்து இருந்தால், மனைவியை அல்லது காதலியை பக்கத்தில வைச்சுக் கொண்டு தேடினீர்கள் என்றால் மாட்ட வாய்ப்புள்ளது! எந்த இடத்தில் இருக்கு என்று காட்டித் தொலைச்சிடுமே!)
image
இடத்தை காட்டியாச்சு… இனி எப்படி திரும்ப பெறுவது?
அதற்கு உங்கள் தொலைபேசியை நீங்க இருக்கும் இடத்தில் இருந்து அழைக்கலாம் (Ring). Silent ஆக இருக்கும் வகையில் மாற்றி இருந்தாலும் கவலை வேண்டாம். ஆகக் கூடிய சத்தத்தில் உங்கள் தொலைபேசியை அழைக்கமுடியும்! சத்தத்தை கேட்டு எடுத்த புண்ணியவான் தந்தால் சரி! தராவிட்டால் என்ன செய்வதாம்? முக்கியமான தகவல்கள் களவு போய்விடுமே!
எப்படி தகவல்களை காப்பது?
உங்கள் தொலைபேசி நிச்சயமாக கிடைக்காது என்று தெரிந்தவுடன் நீங்க அடுத்த அஸ்திரத்தை எய்யலாம். அதாவது உங்கள் தகவல்களை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்த வண்ணம் அழிச்சிடலாம்!
நானும் இந்த வசதியைப் பெறலாமா?
Adroid 2.2 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்கு தளத்தை கொண்ட கைத் தொலைபேசியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், நீங்களும் இந்த வசதியைப் பெறலாம். என்ன ஒன்று கூகிள் கணக்கும் கட்டாயம் தேவை!