2014ல் அசத்தப்போகும் 7 தொழில்நுட்ப ட்ரெண்ட்கள்

2014 ஆண்டில் அப்படி நம்மை வியப்பில் ஆழ்த்தப்போகிற பயனுள்ள விஷயங்கள் என்னவாக இருக்கும்? அதுபற்றிய ஒரு பட்டியல் இங்கே:
nest_smarthome
1. புத்திசாலி இல்லங்கள்: வீடுகளை ஸ்மார்ட்டாக்கும் தொழில்நுட்பங்களை இந்த ஆண்டில் நிறைய எதிர்பார்க்கலாம். உதாரணமாக, Nest என்ற Smart Home Thermostat, Smoke Detector, Lockitron என்ற ஸ்மார்ட் பூட்டு… இதுபோன்ற இணைய வசதியுடன் கூடிய வீட்டு உபயோகப் பொருள்கள் நிறைய வரும். இவை நம் ஃபோனுடனும், பிற கருவிகளுடனும் பேசிப் பல பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்யும்.
privacy
2. இனி எதுவும் ரகசியமில்லை: சென்ற ஆண்டில் எட்வர்ட் ஸ்னோடென் உபயத்தில் நமது தனிப்பட்ட விவரங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று அறிந்தோம். இதனால், பல நிறுவனங்கள் இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது என்று புரியாமல் திணறுகின்றன, இதனைத் தீர்க்கிறோம் என்று களத்தில் குதிக்கும் புதிய நிறுவனங்களும் உண்டு. ஆனால், இதற்குச் சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடைக்கும்வரை, தொழில்நுட்ப நிறுவனங்களால் என்ன பெரிதாகச் செய்யமுடியும் என்பது கேள்விக்குறிதான்.
3. எங்கும் விளம்பரங்கள்: ஏற்கெனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் செய்திகளிலும் கவனமாக நுழைக்கப்படும் விளம்பரங்களைப் பார்த்துவிட்டோம். இனி அது எல்லா இடங்களுக்கும் பரவும். இணையத் தளங்கள், இசைத் தட்டுகள் என்று எங்கும் ஸ்பான்ஸர் செய்யப்பட்ட விவரங்கள் நல்ல பிள்ளைபோல் வேஷம் போட்டுக்கொண்டு நம்மை வந்தடையும்.
4.Cloud Wars: Cloud Computing எனப்படும் புதிய தொழில்நுட்பத்துக்கு அநேகமாக எல்லாரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். அதன் சதவிகிதம் இந்த ஆண்டில் மேலும் அதிகரிக்கும். பெரிய நிறுவனங்கள் பலவும் இதில் குதிக்க, போட்டி அதிகரித்து, விலை குறையும். அதேசமயம், இன்னும் பலருக்கு இதனைக் கொண்டுசெல்ல வழிவகைகளும் அதிகமாகச் செய்யப்படும்.
4KHDTV
5. வணக்கம் மிஸ்டர் 4K: சமீபத்தில் HDTV உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய 4K தொழில்நுட்பம் (அல்ட்ரா HDTV) அடுத்த ஆண்டு இன்னும் பிரபலமாகும். இவை சாதாரண HDTVயைவிட 4 மடங்கு பெரியவை, துல்லியமான படம் தரக்கூடியவை. இதற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் படங்களும் இந்த ஆண்டில் அதிகமாக வரும். அதன்மூலம் இந்த வகை டிவிகளின் விற்பனையும் அதிகரிக்கும்.
6. பறக்கும் ரோபோக்கள்: அமேசான் வெளியிட்ட ஒரு சிறிய வீடியோவால், உலகமே இந்த ட்ரோன்களை எதிர்பார்த்துக்1457காத்துக்கொண்டிருக்கிறது. இதே தொழில்நுட்பத்தைப் பல நிறுவனங்களும் பயன்படுத்த விரும்புகின்றன. இதற்கு ஏற்ற அரசாங்கச் சட்டங்கள் அமலுக்கு வந்தால், அது ஒரு மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கும். வேறெதற்காக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக இவை அதிகம் பயன்படுத்தப்படும்.
7. நானோ டெக்னாலஜி வளர்ச்சிகள்: மூலக்கூறு நிலையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நானோ தொழில்நுட்பம் இப்போதுதான் மக்களை வந்தடைந்துள்ளது. குறிப்பாக, மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இவை மேலும் முன்னேறும். பயனுள்ள புதிய தயாரிப்புகள் வரும்.
இவைமட்டும்தானா? இன்னும் ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் வருமோ? டாப்லட்களின் தோற்றம் மாறுமோ? அணிந்துகொள்ளும் கணினிகள் மேலும் பிரபலமாகுமோ? தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருப்போம்!