நயன்தாரா, உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ காதலர் தினத்தில் வெளியாகிறது

4304ad69-6dd7-43e4-9222-742f658fbe04_S_secvpf
உதயநிதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந் தேதி காதலர் தினத்தில் ரிலீசாகிறது. முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இதன் பாடல் வெளியீடு 20–ந் தேதி நடக்கிறது.
இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமார், லட்சுமிமேனனை வைத்து சுந்தரபாண்டியன் ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.
உதயநிதி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் அறிமுகமானார். அதில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவதாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’ படம் வருகிறது.