மணிக்கு 19 மைல் வேகத்தில் பயணிக்கும் இராட்சத ரோபோவை உருவாக்கும் கனேடிய பொறியியலாளர்கள்

ஹொலிவூட் திரைப்­ப­ட­மான அவ­தாரில் வரு­வ­தை­யொத்த அச்­ச­மூட்டும் இராட்­சத உயர் தொழில்­நுட்ப ரோபோ இயந்­தி­ர­மொன்றை உரு­வாக்கும் முயற்­சியில் கன­டாவைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளனர்.

புரொஸ்­தீஸிஸ் என்­ற­ழைக்­கப்­படும் இந்த ரோபோ மனி­தனால் மனி­த­னுக்­காக உரு­வாக்­கப்­படும் உன்­னத படைப்­பென அதனை உரு­வாக்கி வரும் கன­டாவின் வான்­கூ­வரைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
கடின வெளிப்­புற கட்­ட­மைப்பைக் கொண்ட 16 அடி உய­ர­மான இந்த ரோபோவை அதி­லுள்ள அறைக் கட்­ட­மைப்பில் அமர்ந்­துள்ள மனிதர் ஒருவர், தனது உடல் அசைவால் கட்­டுப்­ப­டுத்த முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

7,500 இறாத்தல் நிறை­யு­டைய இந்த ரோபோ மணிக்கு 19 மைல் வேகத்தில் பய­ணிக்­கக்­கூ­டி­யது.
பொறி­யியலா­ளர்கள் ஏற்­க­னவே மேற்­படி ரோபோ இயந்திரத்தின் செயற்றிறன் மிக்க கால் பகுதியை வெற்றிகரமாக உருவாக் கியுள்ளனர்.