NFC (Near Field Communication)
என்ன இவன் ஏதோ ABCD எல்லாம் சொல்லி ஆரம்பிக்குறானே.. ஏதாவது பாடம் நடத்த போறானோ, எண்டு நிணைக்காதீங்க. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். சிலர் இதபற்றி கொஞ்சமும் தெரியாமலே கூட இருக்கலாம். ஆனா இதுதான் இப்போ இலங்கையில் புதிதாக ( இளசுகலோட பாசையில சொல்லனும்னா "லேட்டஸ்டா") அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம். இலங்கையில் தொடர்பாடல் தொழில்நுட்பம் (Telecommunication Technology ) என்டாலே புதுசா அறிமுகப்படுத்துறதுனா முதல்ல நிக்குறது எப்பவும் நம்ம Mobitel தானே!. இந்தமுறையும் அவங்கதான் அறிமுகப்படுத்தியிருக்காங்க. (விளம்பரமில்லபா உண்மையச் சொன்னேன் என்னதான் Dialog, இலங்கை Full ஆ 2G(VoiceCall) ல கிங்கா இருந்தாலும் 3G(Internet) னா அது மொபிடல் தான். இத நான் சொல்லல TRC சொல்லுது சந்தேகம்னா TRC Latest Ratingஅ பாருங்க. அதுசரி அவங்க தொழில்போட்டி நமக்கு என்னத்துக்குன்னு கேக்குறீங்க, ம்ம் விஷயத்துக்கு வந்திடுரேன். இப்போ எல்லாம் 5 வயசு குழங்தையில இருந்து 65 பாட்டி வரைக்கும் எல்லார் கையிலயும் செல்போன் தான் அதுவும் சும்மா இல்லைங்க "ஸ்மார்ட் போன்" அதாங்க இன்டனெட் பெசிலிட்டி உள்ள போன்.. இளசுகள் என்னடானா Android, IPhone னு அந்த போன் திரைய போட்டு தேய்க்கிற தேய்ல பெருவிரலே தேய்ஞ்சிடும் போல இருக்கு... நம்ம நாட்ல எது வளராட்டியும் தொடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிற வளர்ச்சிய நினைச்சா ரொம்ப பெறுமையா இருக்கு, இதெல்லாம் இப்டி இருக்க இதுக்கு மேலால ஒரு தொழில்நுட்பம் அதாங்க இந்த NFC வந்திருக்கு. NFC என்டா என்ன? "அருகிலுள்ள தொழில்நுட்ப கருவியை, கைப்பேசி ஒன்றை பயன்படுத்தி இயக்குவதன் மூலம் எமக்கு தேவையான "அனுமதி வழங்கப்பட்ட"சில தகவல் பாரிமாற்றங்களையும், கொள்வணவுகளையும், பணப்பரிமாற்றங்களையும் மேற்கொள்ள உதவியழிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பம்" .யப்பா எப்ப இவன் கொமர்ஸ் வாத்தியாரானானு பார்க்குரீங்க... ம்ம் அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பணவு வேனும்ல நமக்கு அதல்லாம் இல்லீங்க....
உங்கல்ல பல பேருக்கு தெரிஞ்சிருக்குமோ தெரியல இப்போ வர்ற அனேகமான போன்கள் இந்த தொழில்நுட்பத்துடனேயே வருது.. NFC தொழில்நுட்பமுடைய போன்களில் விஷேசம் என்னன்னா: உங்கட கையில NFC தொழில்நுட்பமுடைய போன் ஒன்று இருக்குமா இருந்தா முக்கியமா அதில மொபிடல் சிம்கார்ட் போடப்பட்டிருக்குமாக இருந்தால் நாளையோட நீங்க பேர்ஸ் ல கிரடிட் கார்ட் வீசா கார்ட், மாஸ்டர் காட்டுனு கார்ட்டுகள அடுக்கிக்கொண்டு போக வேண்டிய தேவையேயில்ல நீங்க இந்த கார்ட்டுகள்ள செய்ற வேலை எல்லாத்தையும் உங்கட கையில இருக்கிற போன்லயே செய்து முடிச்சிடலாம். இத உபயோகிக்கிறதுக்கு நீங்க ஸ்பெஷலா ஒன்டுமே செய்ய தேவையில்ல மொபிடல் ஆர்கெட்டுக்கு ஒருதரம் போய் பதிவு செய்துகொண்ட்டா போதும். இப்பதான் அறிமுகம் என்றதால சில முக்கியமான இடங்கல்ல தான் இப்போ பாவனையில இருக்கு விரைவில எல்லா இடங்கலிலேயும் இந்த சாதனத்தை பொருத்தப்போறதா மொபிடல் சொல்றாங்க இப்போ கொழும்பில் எனக்கு தெரிந்த அளவில Majestic City, Liberty Plaza, Liberty Theater, McDonald, Savoy Theater & Post Offices இந்த இடத்துக்கு எல்லாம் போனீங்கனா கண்ண கொஞ்சம் அலசிப்பாருங்க
NFC Reader |
இப்பிடி ஒரு டிவைஸ் இருக்கும். இந்த கருவிக்கு முன்னால உங்கட செல்போன வச்சீங்கனா உங்க செல்போனுக்கு ஒரு (sms Alert) குறுஞ்செய்தி வரும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விருப்புகிறீர்களா எண்டு கேக்கும். அதுக்கு நீங்க பதிலளித்தால் உடனே அடுத்த sms குறுஞ்செய்தி அங்குள்ள சேவைகள் பற்றி அரியத்தரும் பின் நீங்கள் அவற்றிலுள்ள சேவைகளை தெரிவுசெய்து பயன்படுத்தலாம். குறிப்பாக தற்போது இலங்கையில் NFC பயன்பாட்டிலுள்ள சேவைகள் இவைதாங்க:
1. Transportation tickets:
பயன அனுமதி சீட்டு கொள்வணவு அதாங்க ரெயின் டிகெட், பஸ் டிகட் பிலைட் டிகட் இப்படி பல டிகட்டுகள்.
2. boarding passes
தங்குமிட முற்பதிவு (ஹோட்டல் புக்கிங்) , மற்றும் நேரடிப்பணம் செலுத்துகை.
3. m-Money
மொபிடல் பணச்செலுத்துகை வசதி மூலம் பொருற்கொள்வனவு
4. online payments
இணையத்தள கட்டணங்கள் உதாரணமா உங்க போன் பில், கரண்ட பில், தண்ணி பில்ல உங்க போன்லயே கட்டலாம்
5. student/employee ID cards
சில பிரபல கல்வி நிறுவனங்களிலயும் கொழும்பு பல்கழைக்கலக கணனிப்பிரிவில யும் உட்செல்லல் அனுமதிப்பத்திரத்திற்கு பதிலா உங்க போனையே NFC கருவி மேல காட்டிடு போகலாம்.
6. access control சில கருமங்களுக்கு உங்களை உறுதிப்படுத்த நீங்கள் உபயோகிக்கும் உங்கள் ஆள்அடையாள அட்டைக்குப் பதிலாக உங்கள் போனை ஒருதரம் காட்டடினால் உங்களுக்குறிய அனுமதி வழங்கப்படும்.
7. m-Tickets
படம் பார்பதற்க டிகட் வாங்கும் வசதி, இப்போ Liberty மற்றும் Savoy Theater ல புதுசா ஒரு வசதி இருக்கு அதாவது எதிர்பாராத விதமா ரோட்ல போஸ்ர பார்த்து அந்த படம் பார்க்கனும்னு யோசிச்சீங்கனா வெரி சிம்பிள். அந்த போஸ்டர்ல கீழ படத்தில இருக்கிற மாதிரி NFC எண்ட அடையாலத்துக்கு முன்னால உங்க போன பிடிச்சா போதும் உங்களுக்கு வார எஸ்எம்எஸ் மூலம் டிகட் வாங்கிடலாம். படம் போட 10 நிமிஷத்துக்கு முதல்ல Theater கு போனா போதும் உங்க போன அங்க உள்ள கருவில பிடிச்சா உடனே உள்ள போக அனுமதி கிடைச்சிடும்.
8. loyalty points
நீங்க எப்பவாவது ஹப்பியா பொழுத கழிக்கனும்னு நினைச்சீங்கன்னா அல்லது எதிர்பாராதவிதமா பிரண்ட்ஸ் எல்லாம் Leisure World போக செட் ஆகிட்டாங்க கையில காசுமில்ல கார்ட்டும் கொண்டு வரலனா கவலைய விடுங்க உங்க போன் உங்களுக்கு உதவி செய்யும். அங்க உள்ள டிவைசில போன காட்டிடு போயிட்டே இருக்கலாம்.*9. Government Services
உண்மையிலயே இதுதாங்க முக்கியமான சேவை நிச்சியமா உங்க எல்லோருக்கும் பயன்படக்கூடிய வேவை. உதாரணமா ஒரு கல்விப்பொதுத்தராதர பத்திரத்தோட பிரதி எடுக்கனும்னா நாம படுர பாடுஇருக்கே! அதுக்காகவே 2 நாள் செலவழிக்கனும். இலங்கையில எந்த மூலயில இருந்தாலும் கஷ்டப்பட்டு பத்தரமுள்ள வந்து அங்க நாள் முழுக்க போலீன் நிண்டு Application குடுத்திட்டு பிறகு சேர்டிபிகேட் வாங்குறதுக்காக evening திரும்ப போலீன் நிண்டு ஒரு துண்ட வாங்கி ஒரு சீலுக்காக அடுத்தநாள் முழுக்க Foreign மினிஸ்ரிக்கு முன்னால தவம் கிடந்து.... அப்பப்பா நிணைக்கவே கடுப்பா இருக்கு.. இதுக்கெல்லாம் விடிவு இப்போ கிடைச்சிருக்கு, ஓம் பாருங்கோ, இனிமே தபால் கந்தோருக்கு போனா இப்பிடி ஏதாவது கருவிய கண்டா சும்மா விட்டுடு வந்துடாதாதீங்க.. அங்க இருக்கிற NFC Reader ல முக்கியமான அரச திணைக்களங்களின் கடமைகள நேரமிச்சத்தோட பணச்செலவில்லாம செய்யலாம்ன்றத எப்பவும் ஞாபகம் வச்சிருங்க...
அரச சேவைகள்:
1. NIC / Birth Certificate மூலப்பிரதியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி பெறுதல்.
2. பெயர் மாற்றங்கள் மற்றும் வேறு பல தேவைகளுக்கா ஆட்பதிவு திணைக்களத்திடம் விண்ணப்பித்தல்.
3. பரீட்சைப் பெறுபேறுகளின் பிரதிகளை பெற்றுக்கொள்ளல்
4. மற்றும் பல அரச கருமங்களை மிக விரைவில் செயற்படுத்தக்கூடிய வசதி இதற்கு தபாலகத்தின் பிரிண்ட் செய்யும் செலவு மாத்திரமே உங்களுடையது. அதுவும் மொபி்டலூடாக செலுத்தப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தபாலகத்திலுள்ள கருவியில் (இத ஒரு டச் ஸ்க்ரீன் மொனிட்டரையும் கொண்டது) உங்கள் போனை காட்டியதும் அங்கு திரையில் உங்கள் விபரம் காட்டப்படும் பின் உங்கள் தே.அ.அ விபரங்கள் சரியானதா என பரிசீலிக்கச்சொல்லும். அதற்கு பதிலளித்தவுடன் உங்களுக்கு தேவையான அணைத்து வசதிகளையும் திரையில் காட்டப்படும்.
10. Multi function cards as well as consumer electronics.
வீசா கார்ட்களை உபயோகித்து பொருட்கொள்வணவுக்கு பதிலாக உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி அதியுயர் பாதுகபப்புடன் பொருட்கொள்வனவு செய்யலாம். (அதாங்க வீசா கார்டட்டுக்கு பதிலா போன பயன்படுத்தலாம்) ஆனால் போன் காணாம போனா உடனே மொபிடலுக்கு அறிவிக்காம விட்டீங்கன்ணா அப்ரம் வார பிரச்சனைக்கு நீங்கதான் பொறுப்பு...
"ஒரு முக்கியமான செய்தி இத வாசிக்கிற நீங்க ஒரு தொழிலதிபர் அல்லது கடை முதலாலி எண்டா மொபிடல் காட்சியரைய நாடுநீங்கன்னா நீங்களும் உங்க கடைக்கு முன்னால welcome Visa எண்டு போடுறதுக்கு பதிலா Welcome NFC எண்டு போர்ட் வைக்கலாம். புதுதொழில்நுட்பமில்லையா முயற்சிசெய்துதான் பாருங்களேன் வாடிக்கையாளரிடம் எவ்வளவு வரவேற்பிருக்குனு."
பிடிச்சிருந்தா கொமண்ட் பண்னுங்க பிடிக்கலைனாலும் கொமண்ட் பண்னுங்க றொம்ப பிடிச்சிருந்தா அதோட சேர்த்து லைக் பண்ணி நண்பர்களுக்கும் Share பண்ணுங்க.
சொல்ல மறந்துடேங்க இவைதான் தற்போது NFC Facility இருக்கிற போன் வகைகள்.
- Acer E320 Liquid Express
- Benq T80
- BlackBerry Bold 9790
- Blackberry Bold 9790 (Bellagio)
- BlackBerry Bold 9900/9930
- BlackBerry Bold 9900/9930 (Dakota/Montana)
- Blackberry Curve 9350/9360/9370
- BlackBerry Curve 9380
- BlackBerry Torch 9810/9860
- Casio DT-X8
- Casio IT-800
- C-mii 1
- C-mii 3
- Fujitsu Arrows µ F-07D
- Galaxy Nexus
- Google Galaxy Nexus
- Google Nexus S
- Google Nexus S 4G
- HTC Amaze 4G
- HTC Incredible3
- HTC One X
- HTC One XL
- HTC Ruby/Amaze 4G
- Huawei Sonic
- Huawei Sonic T20
- Huawei Sonic/Turkcell T20
- Kuoziro FT701W NFC Tablet
- LG 600V contactless
- LG Optimus LTE
- LG Optimus Net
- LG Optimus Vu
- LG T530 Ego
- Mobiwire Cosyphone
- Motorola Droid Razr
- Motorola L7 (SLVR)
- Motorola MC75A HF
- Nexus S
- Nokia 3220 + NFC Shell
- Nokia 5140i + NFC Shell
- Nokia 603
- Nokia 6131
- Nokia 6212 Classic
- Nokia 6216 Classic
- Nokia 700
- Nokia 701
- Nokia C7/Astound
- Nokia Lumia 610
- Nokia N9
- Nokia N9
- Nokia Oro
- Panasonic BizPad
- Pantech Sky Vega LTE
- Porsche Design P’9981
- Prada phone by LG 3.0
- Sagem Cosyphone
- SAGEM my700X Contactless
- Samsung D500E
- Samsung Galaxy Note
- Samsung Galaxy S Blaze 4G
- Samsung Galaxy S II
- Samsung S5230
- Samsung S5230 Tocco Lite/Star/Player One/Avila
- Samsung S5260
- Samsung SGH-X700
- Samsung SHW-A170K
- Samsung Wave 578
- Samsung Wave M
- Samsung wave Y
- Sharp RW-T107 NFC Tablet
- Sharp RW-T110 NFC Tablet
- Sky Vega Racer
- Sonim XP1301 CORE
- Sonim XPand
- Sony Xperia P
- Sony Xperia S
- Sony Xperia SOLA
- Turkcell T11
- Turkcell T11 Maxiphone
- Turkcell T20
- Wii U Controller
- Xolo X900