100வது நாளில் ‘ராஜா ராணி’

raja_rani011

100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது அட்லியின் ராஜா ராணி. அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடிப்பில் வெளியான படம் ராஜா ராணி. 
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவில் மாறுபட்ட விளம்பர யுக்திகளோடும், கதை சொல்லுதலோடும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இன்றுடன் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ராஜா ராணி’. இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்களை கடந்து ஓடுவது என்பது அரிதான விடயமே.‘ராஜா ராணி’ அந்த சாதனையை புரிந்துள்ளது. -