சீனாவில் தெனாலிராமன்!



நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகை புயல் வடிவேலு இரு வேடங்களில் நடிக்கும் சரித்திரப்படம் ஜகஜால புஜபல தெனாலிராமன். இந்த படத்தின் முக்கால் பங்கு படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள காட்சிகளை படமாக்க இம்மாத இறுதியில் சீனா செல்ல இருக்கின்றனர் படக்குழுவினர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததால் ஒரு பாடல் காட்சியையும், க்ளைமாக்ஸ் காட்சியையும் சீனாவில் படமெடுக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். இயக்குனர் யுவராஜ். டி.இமானின் இசையில் படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி சேஷாத்திரி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளனர். தம்பி இராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. AGS எண்டெர்டெயின்மெட் தயாரிக்கும் இந்த படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது.