ஜில்லா படத்திற்கு “யு” சான்றிதழ்

“ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது.

www.sudarcinema.com
சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளதால் பட குழுவினர் சந்தோசத்தில் உள்ளனர்.
சூரி, மகத், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
ஜில்லா வெளியாகும் அதே நாளில் அஜித்தின் வீரம் படமும் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த பொங்கல் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.