பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ‘என்றென்றும் புன்னகை’


endrendrum punnagai
பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது என்றென்றும் புன்னகை. என்றென்றும் புன்னகை, பிரியாணி, இவன் வேற மாதிரி, மதயானக்கூட்டம் ஆகிய படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையில் களமிறங்கின 
அதில் கமர்ஷியல் ஹிட் என்று கொண்டாடப்பட்ட இவன் வேற மாதிரி வார இறுதியில் 16.05 லட்சங்களையும், வார நாட்களில் 27.2 லட்சங்களையும் வசூலித்த படம் இதுவரை சென்னையில் வசூல் செய்திருப்பது 3.7 கோடிகள். 
பிரியாணிக்கு டிமாண்ட் இருக்கிறது. வார இறுதியில் 98 லட்சங்களை பிரியாணி வசூலித்துள்ளது. வார நாட்களில் 1.06 கோடி. இதுவரை 3.2 கோடிகளை படம் வசூலித்துள்ளது. அறிமுக இயக்குனரின் மதயானைக்கூட்டம் வார இறுதி மூன்று தினங்களில் 14.4 லட்சங்களை வசூலித்த படம் முதல் ஐந்து தினங்களில் 22.3 லட்சங்களை வசூலித்துள்ளது. 
ரொமாண்டிக் கொமடிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்திருக்கும் படம் என்றென்றும் புன்னகை. வார நாட்களில் 1.24 கோடியும், வார இறுதியில் 1.3 கோடியும் வசூலித்து 3.7 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் புன்னகையில் உள்ளனர் படக்குழுவினர். -