ஒருவரின் பேஸ்புக் password ஐ hack செய்யலாமா...???

இன்றைய காலங்களில் நமது ஆளுங்க சும்மா இருக்க மாட்டாங்க.. அடுத்தவன் விசயத்த அறிவதில் தான் நேரம் போகிறது.. ( பொதுவாகத்தான் சொல்கிறேன்.. ) அதுபோல பேஸ்புக்கில் ஒருவருடைய password ஐ hack பண்ணனும்னே கொஞ்சப் பேர் திரிகிறார்கள்.

எனவே, அவர்களுக்கு ஒரு துன்பகரமான செய்தி. நீங்க என்ன செய்தாலுமே ஒருவரின் பேஸ்புக் password ஐ hack செய்வது கடினம்.

பலர் கூகிளில் தேடித் தேடி பார்த்திருப்பீர்கள். அங்கே பேஸ்புக் password ஐ hack செய்வதற்க்கு மென்பொருளாகவோ அல்லது அந்த website இலேயே பெருவதற்க்கு வசதிகள் காணப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே பொய்யானவை.

அதற்குக் காரணம் ஆண்டொன்றுக்கு பேஸ்புக் மில்லியன் கணக்கில் தனது பாதுகாப்பிற்க்காக பணத்தை செலவிட்டு வருகிறது.

மார்க் Zuckerberg உம் அவர் தொழிலாளர்களும் ஏன் Headquarter ல இருக்காங்க...??

இப்படியான போலியான சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்வதால் உங்கள் நேரம் தான் Waste.

பின் ஏதற்கு இந்த சேவைகள் காணப்படுகின்றன??
இவை அனைத்துமே Hacker களால் உருவாக்கப்படுபவை.

உதாரணமாக நீங்கள் பேஸ்புக் Hack செய்யும் மென்பொருளைத் தரவிறக்கினால் உங்கள் கணனியில் காணப்படும் சில தரவுகளையும், Online Banking Service என்பவற்றை அந்த மென்பொருள் create செய்த Hacker ன் Server ற்கு அனுப்பும். இதனால் உங்கள் Credit Card மேலும் முக்கிய தரவுகளை வைத்து அதனைத் தவறான பாதையில் பயன்படுத்துவார்கள்.


அப்படியானால் பேஸ்புக் Password ஐ Hack செய்யவே முடியாதா...??

யாரு சொன்னா இல்லைன்னு.. Hack செய்ய முடியும்.. அதற்க்கு நிச்சயமாக ஒரு சிறந்த Hacker ஆல் மட்டுமே முடியும். அதாவது Hackers ஆல் மட்டுமே அந்த இணையத்தளத்தின் Security Level ஐ வைத்து Hack செய்ய முடியும்.

நான் கூறவருவது என்னவென்றால்.... நிச்சயமாக இணையத்தில் காணப்படும் எந்த விதமான Application களாலும் பேஸ்புக் Password ஐ Hack செய்ய முடியாது.

அப்படி Hack செய்ய வேண்டுமானால்.. சரியான வழியில் நீங்கள் Hacking படித்தால் செய்யமுடியும்..

".....நேரம் பொன்னானது இப்படியான போலியை கண்டு அதில் நேரத்தை செலவிடாதீர்கள்....""