பலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
ஸ்கிரீன் ஷாட் என்றால் என்ன? (What is Screen Shot?)
கணினி, ஆண்ட்ராய்ட் போன்(Android Smartphone), டேப்ளட் பிசி(Tablet Pc) களின் திரையில் உள்ள காட்சியை அப்படியே படமாக மாற்றுவதுதான் ஸ்கிரீன்ஷாட். கணினியில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க Print Screen என்ற பட்டன் இருக்கும்.
ஆனால் புதிய வகை ஆண்ட்ராய்டு, டேப்ளட் பிசிக்களில் அதுபோன்று தனியாக பட்டன் எதுவும் இருப்பதில்லை. ஸ்கீரின் ஷாட் எடுக்க குறுக்கு விசைகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வழிமுறை:
ஆண்ட்ராய்ட் போனில் பவர் பட்டனையும், ஹோம் பட்டனையும் ஒருசேர அழுத்தினால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.