தவறவிட்ட திரைப்படங்களை செலவில்லாமல் பார்க்கலாம்

பொங்கல், தீபாவளினு எதாவது ஒரு பண்டிகை வந்தாலே எந்த டிவியில எந்த புதுப்படம் போடுறாங்கன்னு எதிர்பார்ப்போம். நல்ல படம் இந்த படத்தை பார்த்தே ஆகணும்னு நினைப்போம். அனா, அந்த நேரத்துல கரெக்டா எதாவது வேலை வந்துடும். அப்புறம் என்ன....?  நேரம் கிடைக்கும் போது cd வங்கி பார்க்க வேண்டியது தான். அப்படியும் இல்லைனா இண்டர்நெட்ல திருட்டுத்தனமா வெளியகுற லிங்க்ல தரமற்ற பிரிட்ட டவுன்லோட் பண்ணி பார்த்துக்க வேண்டியதுதான். இந்தக் கதை கொஞ்சம் மாறப் போகுது. மாற்ப் போகுது இல்ல..... மாறிடிச்சி.

You Tube ல் கொட்டி கிடக்கும் ஆயிரம் கணக்கான இலவச படங்களை ஒரே இடத்தில் பட்டியலிட்டு காண வழிவகை செய்திருக்கிறது Zero Dollar Movies. காலத்தால் அழியாத திருவிளையாடல் முதல் இன்றைய இளைஞர்களின் உயிர் மூச்சான காதல் படம் வரை அத்தனையும் தெளிவான தரத்தில் எந்த வித தத்து பித்தும் இல்லாமல் இலவசமாக காண இயலும் நிலையை உருவாக்கி இருக்கிறது. பதிவிறக்க வேண்டிய அவசியம் இல்லை நேரடியாக படத்தை தேர்வு செய்து ஆன்லைனிலேயே காணலாம். இலவசமாய்...!