தனது பத்தாவது பிறந்த நாளில் பேஸ்புக் நமக்கு தரும் பரிசு

fb lookback
பத்தாண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் (04/02/2004) தொடங்கப்பட்ட பேஸ்புக் தளம் இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானவர்களை ஆக்கிரமித்துள்ளது. சொல்லப்போனால் பேஸ்புக்கை பயன்படுத்தவே இணையத்திற்கு வந்தவர்கள் கூட இங்கே இருப்பார்கள். நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக உள்ள பேஸ்புக் தளத்தை இன்று 120 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட இந்தியாவின் மக்கள் தொகைக்கு சமம் இது.
பேஸ்புக் தளம் நமக்கு பரிசாக அளித்துள்ள Look Back வீடியோவில், நாம் பேஸ்புக் கணக்கு தொடங்கிய நாள் முதல் இன்று வரை நமக்கு அதிக லைக்ஸ் வாங்கி தந்த புகைப்படங்கள்/ஸ்டேட்டஸ் உட்பட 16 போட்டோ & ஸ்டேட்டஸ்களை 1:02 நிமிட வீடியோவாக தொகுத்து நமக்கு கொடுத்துள்ளது.
உங்கள் Look Back வீடியோவை பார்க்க - https://www.facebook.com/lookback