PK – இப்படியும் ஒரு நல்ல படமா ?




அமீர் கான் , அனுஷ்கா ஷர்மா, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி வெளி வந்திருக்கும் படம் பீகே.
இப்படியும் ஒரு படமா!.. என்று வியக்கும்  அளவிற்கு மத கோட்பாடுகள், மூட நம்பிக்கைகள் குறித்து மிக அருமையாக எடுக்கப்பட்டிருகின்றது.
ஏலியனாக பறக்கும் தட்டின் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியில் ஆடையின்றி நுழையும் அமீர் கான், தன் கழுத்தில் கட்டியிருக்கும் டாலர் போன்ற படத்தில் ரிமோட் கண்ட்ரோல் என சொல்லப்படும் பொருள் திருடப்படுகின்றது. அதனால் திரும்பி தன் உலகிற்கு போக முடியாமல், அவர்படும் அல்லல்களும், நகைச்சுவையும் தான் அவ்வளவு அருமையாக படமாக்கப் பட்டிருக்கின்றது.
மகாத்மா காந்தியின் படம் ருபாய் நோட்டில் இருந்தால் மட்டுமே மதிப்பு என்பதை அறியாமல் உணவிற்காக அவர் சேகரிக்கும் மகாத்மா காந்தியின் படங்கள் அனைத்தும் வீணாய்ப்போகின்றன.
கடவுளிடம் கேட்டால் தன் ரிமோட் கண்ட்ரோல் கிடைக்கும் என்பதற்காக அவர் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இறுதியில் கடவுள் (god missing) காணவில்லை என்று நோட்டீஸ் அடித்து ஒட்டும் அளவிற்கு போய் விடுகிறார்.
இறுதியில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா என நம்மையும் குழப்பி,
நம்மைப் படைத்த கடவுள் மட்டுமே உண்மை, ஆனால் நாம் படைத்த கடவுள் போலி எனும்போது, நம் மனம் நம்மிடம் இல்லை.
ஒவ்வொரு மனிதனும் பீகே போல ஆடையின்றிதான் இந்த உலகிற்கு வருகிறான், மத கோட்பாடுகள், மூட நம்பிக்கைகள் அவன் மீது பூசப்படுகின்றது. இடையில் மதவெறி, கலவரம், உயிரிழப்பு என ஏராளம். இறுதியில் நம்மை விட்டுப் பிரிகின்றான் என முடிவது நம்மை யோசிக்க வைக்கிறது.
இடையில் ஒரு காதல், ஒரு பிரிவு, இறுதியில் ஒரு தெளிவு என மிகவும் நன்றாக படம் அமைந்திருக்கின்றது.
கதைப்படி அவர் (amir khan) நடித்திருக்கிறார் என்பதே உண்மை. இதில் ஒரு சராசரி மனிதனாக பார்த்தால் அவர் எந்த ஒரு மதத்தையும் இழிவு படுத்தவில்லை என்பது புரியும்.