How-Return-Products-Purchased-On-Amazon



ஆர்டர் முதலில் அமேசான ஆர்டர் பக்கம் செல்லுங்கள்


 

கட்டம்
 
 அனைத்து ஆர்டர்களும் கட்ட வடிவில் பாக்ஸில் இருக்கும், நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய கட்டத்தை வரும் வரை பக்கத்தின் கீழ் செல்லுங்கள்

 
ரிட்டர்ன் 
 
திருப்பி கொடுக்க வேண்டிய பொருட்களுக்கு வலது புறத்தில் இருக்கும் ரிட்டர்ன் என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்

 

செக்மார்க்
 
 இதே போன்று திருப்பி கொடுக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் க்ளிக் செய்யுங்கள்

 
 
காரணம் 
 
திருப்பி கொடுக்க வேண்டியதற்கான காரணத்தை தேர்வு செய்த பொரு்களுக்கு வலது புறத்தில் இருக்கும் அதற்கான இடத்தில் நிரப்ப வேண்டும்
 
 
சரியான காரணம் 
 
திருப்பி கொடுப்பதற்கான முழுமையான காரணத்தை ட்ராப்-டவுன் பாக்ஸ் மெனுவில் நிரப்ப வேண்டும். இந்த மெனு திருப்பி கொடுக்க வேண்டிய பொருளை தேர்வு செய்தவுடன் காணப்படும்.
 

க்ளிக் 
 
அடுத்து Continue என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

 

தீர்வு


அடுத்த பக்கத்தில் உங்கள் பிரச்சனைக்கான தீர்வை அமேசான் அளிக்கும், இந்த கட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் Refund என்ற ஆப்ஷன் மட்டுமே காணப்படும், இங்கு Continue என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இடம்:
 
இதை அடுத்து திருப்பி கொடுக்க வேண்டிய இடம் மற்றும் தேதியை நிரப்ப வேண்டும்.


 

முகவரி 
 
 நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய இடம் தானாக இடம் பெற்றிருக்கும், ஒரு வேலை மாற்ற விரும்பினால் Change address என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

 
 
ஒப்படைத்தல் 
 
பொருளை திருப்பி கொடுப்பதை உறுதிபடுத்த Submit என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதையடுத்து அமேசான் தரப்பில் இருந்து யாரேனும் உங்கள் பொருளை எடுத்து செல்வர், பொருளை எடுத்து செல்பவர்கள் கொடுக்கும் சீட்டை பணம் திரும்ப பெறும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.