1.அமேசான் ஃபயர் போன்
ஃபயர்பாக்ஸ் ஓஎஸ் கொண்டு வெளியான இந்த ஸ்மார்ட்போன்களில் பல புதிய சிறப்பம்சங்களை கொண்டிருந்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
2.ப்ளாக்பெரி பாஸ்போர்ட்
பார்க்க வித்தியாசமாகவும் அதிக விலையுடன் வெளியானதும் தான் இந்த ஸ்மார்ட்போனின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
3.ஆன்டிராய்டு ஒன் போன்கள்
கூகுளின் ஆன்டிராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பின் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் பல புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
4.ஃபயர்பாக்ஸ் ஓஎஸ்
போன்கள் குறைந்த விலையில் வெளியான ஸ்மார்ட்போன்கள் என்றாலும் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் பெரும் தோல்வியையே தழுவியது.
5.கூகுள் நெக்சஸ் 6
6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதற்கேற்ற விலை பட்டியல் கொண்டிருந்தும் ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடும்படியான ஸ்மார்ச்போனாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
6.ஆப்பிள் ஐபேட் மினி3
டச் ஐடி கைரேகை சென்சார் இருந்தும் ஆப்பிள் ஐபேட் மினி3 எதிர்பார்த்த அளவு வெற்றிவில்லை என்று கூறுவதோடு இந்த டேப்ளெட் ஆப்பிள் ப்ரியர்களிடம் தோல்வியையே தழுவியது.
7.எல்ஜி ஜி3
அதிக சிறப்பம்சங்கள் இருந்தாலும் டிஸ்ப்ளேவில் இருந்த பிரச்சனை இந்த போனின் வெற்றியை அதிகம் பாதித்தது.
8.நோக்கியா எக்ஸ்
ஆன்டிராய்டு மற்றும் விண்டோஸ் மூலம் இயங்கிய நோக்கியா ஸ்மார்ட்போனும் நோக்கியா ப்ரியர்களிடம் தோல்வியையே தழுவியது.
9.எல்ஜி ஜி வாட்ச்
கூகுளின் முதல் ஆன்டிராய்டு கருவியாக வெளியான ஸ்மார்ட்வாட்ச் என்றாலும் பயனாளிகளிடம் எதிர்பார்த் அளவு வெற்றி பெறவில்லை.
10.பானாசோனிக் எலுகா யு
சிறந்த பேட்டரி மற்றும் சில சிறப்பம்சங்கள் இருந்தாலும் கேமரா பிரச்சனை இருந்ததால் இந்த ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகவில்லை.