யாஹூவில் பாஸ்வேர்ட் இல்லா லாகின் முறை அறிமுகம்..

யாஹூவில் பாஸ்வேர்ட் இல்லா லாகின் முறை அறிமுகம்


சர்வதேச அளவில் இணையத்தள சேவைகளில் முன்னணியில் உள்ள யாஹூ (Yahoo) நிறுவனம், தனது இமெயில் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, பாஸ்வேர்ட் இல்லா லாகின் (Password free email login) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பலரும் தமது வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் கணக்குகளைப் பராமரித்து வருகின்றனர்.
இந்த ஈமெயில் பாஸ்வேர்ட்கள், ஓபன் சோர்ஸ் அடிப்படையினாலானதால், ஹேக்கர்ஸ் எளிதாக, ஈமெயில் கணக்குகளை ஹேக் செய்துவிடுகின்றனர். இதன்காரணமாக, பல முக்கிய விபரங்கள் பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த ஈமெயில் கணக்குகள் திருடப்படுகின்றமை தொடர்பில் Yahoo நிறுவனத்திற்கு பல முறைப்பாடுகள் சென்றுள்ளன.
இதனை நிவர்த்தி செய்யும் ஆய்வில் சமீபகாலமாக Yahoo ஈடுபட்டிருந்தது.
அதன் பலனாக, தற்போது Yahoo நிறுவனம், பாஸ்வேர்டை உள்ளீடாக செலுத்தாமல், ஸ்மார்ட் போனிலிருந்து வரும் நோட்டிபிகேசனின் மூலம், ஈமெயில் கணக்கிற்குள் செல்லும் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ரோய்ட் போன்களில் செயல்படும் வகையில் “அக்கவுண்ட் கீ” என்ற ஆப்சன் கொண்ட அப்ளிகேசனை அறிமுகப்படுத்தியுள்ள Yahoo, இதன் உதவிகொண்டு உருவாக்கப்படும் நோட்டிபிகேசனைக்கொண்டு, பாஸ்வேர்ட் இல்லாமல், ஈமெயில் அக்கவுண்ட்டை நிர்வகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பாஸ்வேர்ட் நடைமுறை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்று Yahoo நிறுவனம் தெரிவித்துள்ளது..