உலகில் உள்ள பல வியப்பூட்டும் வித்தியாசமான சட்டங்கள்..!

News


உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான வியப்பூட்டும் பல வித்தியாசமான சட்டங்கள் அமுலில் உள்ளன.
ரஷ்யாவின் மாஸ்கோவில், பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனமான கார் போன்றவற்றை சுத்தமாக வைக்காவிட்டால் போலீசாரால் அபராதம் விதிக்கப்படும்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில், வீட்டில் பழுதடைந்த மின்சார பல்பை மாற்றுவதற்கு கூட சான்று பெற்ற எலக்ட்ரீசியன் வரவேண்டும்.
ஜப்பான் நாட்டில் மக்கள் குண்டாக இருக்க கூடாது என்ற விந்தையான சட்டம் உள்ளது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ மற்றும் இத்தாலியில் புறாக்களுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
டென்மார்க் ஹோட்டல்களில் சாப்பிடும் மக்கள், தங்கள் வயிறு நிறையவில்லை என்று கருதினால் சாப்பாட்டிற்கு பணம் செலுத்த தேவையில்லை.
டென்மார்க்கில் பகலில் சாலையில் சென்றாலும் வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டு தான் செல்லவேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.
கனடாவில் 10 டாலருக்கு அதிகமாக பொருள் வாங்கிவிட்டு, சில்லறையாக பணத்தினை செலுத்துவதற்கு தடையுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்கடனில் நோயை வெளிக்காட்டக் கூடாது. நோயுடன் வெளியே வந்தால் அபராதம் முதல் சிறைத் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் கலரோடாவில் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் மழை நீரை சேமிப்பது தண்டனைக்குரிய செயலாக கருதப்படுகிறது.
ஜெர்மனியின் நகரம் ஒன்றில், வாகனத்தின் எரிபொருள் பாதியில் தீர்ந்து சாலையில் வாகனம் நின்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்ல தடை உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சுவிங்கம் மெல்ல அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.