லிங்கா, ஐ, என்னை அறிந்தால் தமிழ் சினிமாவின் அடுத்த மூவ்..!

News

தமிழ் சினிமா அடுத்த இரண்டு மாதங்களில் இதுவரை பார்த்திருக்காத ஒரு வசூலைப் பெறப் போவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து மிக முக்கியமான மூன்று திரைப்படங்கள் வெளிவரப் போவதே அதற்குக் காரணம். இதற்கு முன்னர், இப்படிப்பட்ட படங்கள் வந்திருக்க வாய்ப்பிருந்தாலும், அப்போதிருந்த சூழ்நிலையில் கிடைத்த வசூலை விட தற்போது கிடைக்கப்போகும் வசூல் நிச்சயம் சாதனைக்குரியதாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த மாதம் டிசம்பர் 12ம் தேதி, ரஜினிகாந்த், சோனாக்ஷிசின்ஹா, அனுஷ்கா நடிக்க 'லிங்கா' படம் வெளிவர உள்ளது. அதன்பின், ஜனவரி 2015ல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள 'ஐ' படமும், அஜித்குமார், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில், கௌதம்மேனன் இயக்கியுள்ள 'என்னைஅறிந்தால்' படமும் வெளியாக உள்ளது. இந்தப்படங்களின் செலவு சுமாராக 300 கோடி ரூபாய் அளவில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மூன்று படங்களும் வசூலிக்கும் தொகைதான், தமிழ் சினிமாவை, அடுத்த வியாபார கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளிவந்த 'கத்தி' படமே 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றதென்றால், இந்தப் படங்கள் அதையும் தாண்டி வசூலைப் பெற வாய்ப்புள்ளதாகவே கருதுகிறார்கள். ரஜினி படத்திற்கென்று, தனி வசூல் இருந்தாலும், ஒரு வாரம் கழித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை வருவதால் அது அந்தப்படத்திற்கு, மேலும் பலனைக் கொடுக்கும். பொங்கலுக்கு எப்படியும் ஒரு வாரம் வரை விடுமுறை இருக்கும்பட்சத்தில், பல ஊர்களில், தினமும் ஐந்துகாட்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, எப்படியும் இந்த மூன்று படங்கள் மூலம் சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூல் நடந்துவிட வாய்ப்புள்ளது என்றே பலரும் கருதுகிறார்கள்...

உலகில் உள்ள பல வியப்பூட்டும் வித்தியாசமான சட்டங்கள்..!

News


உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான வியப்பூட்டும் பல வித்தியாசமான சட்டங்கள் அமுலில் உள்ளன.
ரஷ்யாவின் மாஸ்கோவில், பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனமான கார் போன்றவற்றை சுத்தமாக வைக்காவிட்டால் போலீசாரால் அபராதம் விதிக்கப்படும்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில், வீட்டில் பழுதடைந்த மின்சார பல்பை மாற்றுவதற்கு கூட சான்று பெற்ற எலக்ட்ரீசியன் வரவேண்டும்.
ஜப்பான் நாட்டில் மக்கள் குண்டாக இருக்க கூடாது என்ற விந்தையான சட்டம் உள்ளது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ மற்றும் இத்தாலியில் புறாக்களுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
டென்மார்க் ஹோட்டல்களில் சாப்பிடும் மக்கள், தங்கள் வயிறு நிறையவில்லை என்று கருதினால் சாப்பாட்டிற்கு பணம் செலுத்த தேவையில்லை.
டென்மார்க்கில் பகலில் சாலையில் சென்றாலும் வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டு தான் செல்லவேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.
கனடாவில் 10 டாலருக்கு அதிகமாக பொருள் வாங்கிவிட்டு, சில்லறையாக பணத்தினை செலுத்துவதற்கு தடையுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்கடனில் நோயை வெளிக்காட்டக் கூடாது. நோயுடன் வெளியே வந்தால் அபராதம் முதல் சிறைத் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் கலரோடாவில் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் மழை நீரை சேமிப்பது தண்டனைக்குரிய செயலாக கருதப்படுகிறது.
ஜெர்மனியின் நகரம் ஒன்றில், வாகனத்தின் எரிபொருள் பாதியில் தீர்ந்து சாலையில் வாகனம் நின்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்ல தடை உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சுவிங்கம் மெல்ல அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Security Tips for iPhone and iPad...

The latest iOS 7 and iOS 8 gives you the better security even without a single loop hole. I give you some essential tips your iphone’s and ipad’s security.
 

Setting Passcode Lock

 

Your Lock Screen is the first way for defense. Setting a passcode lock is just the basic security way. 

Here the way is :
  • Launch Settings from the home screen and tap on Passcode.
  • Scroll down and tap Turn Passcode On.
  • If you would like to use a Passcode longer than 4 digits, turn off Simple Passcode before you tap Turn Passcode On.
  • Enter a 4-digit or more complex Passcode, depending on what you chose, and confirm it by entering it again.
 
You can also use the Passcode feature along with Auto-Lock, which locks your device after a specified time.
 
Here’s how you can turn on Auto-Lock :
 
  •  Launch Settings from the home screen and tap General.
  • Scroll down and tap Auto-Lock.
  • Select a time period of inactivity, after which your device will automatically lock itself choose from 1 minute to 5 minutes, in one-minute increments.
The time starts from the next second after you left the phone usage and after the time you selected for autolock it prompts at home screen with enter the passcode.
 
Find My iPhone/iPad
 
Find My iPhone/iPad is a great app that can locate your iphone or ipad using the Apple ID. It also helps you when you lost your iphone/ipad.
You can setup it by following instructions :
  • Launch Settings from the home screen and tap iCloud.
  • Sign in using your Apple ID.
  • Turn on Find My iPhone/Find My iPad.
If you lose your device, just visit iCloud.com and enter the Apple ID and password and you can find your iphone/ipad location only if your iphone/ipad connected with data connection and with geo navigation is in on and otherwise it’s difficult.
 

Set Data Backup 

 
If you lose your device, you can get the data like photos,videos etc etc if you backed up the data in iCloud or iTunes, the iCloud gives 5GB storage for this.
Here you can setup it :
  • Launch Settings from the home screen.
  • Tap iCloud and sign in if prompted.
Turn on all the apps whose data you want to back up on this screen.
Your data will now be backed up regularly to your iCloud account.
 
 
Browse with Safari 
 
 
 
For the secure browse, it’s better to use Safari. And it’s the most secured browser in mobile devices. It’s just simple and secure.
Some tips in safari for being secured :
  • Avoid pop-ups
  • Turn on Fradulent Website Warning.
 
There were some much more tips. But,These were the essential and basic security tips for iphone and ipad. If you know rather than this just share it in comments.


CAPTCHA TEXT என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கப்சா ரெக்ஸ்ட் (CAPTCHA Text) ஒன்றை மேற்கொள்ளும்படி கேட்கும். இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் கப்சா ரெக்ஸ்ட் என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன?

இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய பதில் குறிப்பு. கப்சா ரெக்ஸ்ட் என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது.  

ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கப்சா ரெக்ஸ்ட் சோதனை. 

இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

உங்களுக்குக் காட்டப்படும் கப்சா ரெக்ஸ்ட் சோதனைக்கான எழுத்துக்கள் அல்லது எண்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், அருகில் வட்டவடிவ அம்புக் குறியாகக் காட்டப்படும் ஐகானை அழுத்தவும். புதிய எழுத்துகள் அடங்கிய கப்சா ரெக்ஸ்ட் சோதனை தரப்படும்.


ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..

மென்பொருளின் பெயர் : Blue Stacks

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்பயூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்த பயன்படுகிறது இந்த மொன்பொருள். இந்த மென்பொருள் windows, mac இயங்குதளங்களில் இயங்கக்கூடிய கட்டமைப்பை பெற்றுள்ளது. 


இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் வைத்துக்கொண்டால், ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய கேம்ஸ், மெசேஜிங் அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களையும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். 

உதராணமாக ஆண்ட்ராய்ட் போன்களில் எத்தனையோ புத்தம் புதிய கேம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் மென்பொருள் இயங்கூடிய சாதனங்களில் அவற்றை விளையாடி மகிழ்வோம். அந்த கேம்களையே கம்ப்யூட்டரில் விளையாட நினைப்போம். அவ்வாறு விளைவாடுவதற்கு நேரடியாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாது.


கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நிறுவம் பயன்படும் ஒரு முக்கியமான மென்பொருள்தான் இந்த Blue Stacks. இந்த மென்பொருளைப் போல வேறு சில மென்பொருள்களும் இருக்கின்றன. என்றாலும் இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானதும், இலவசமானதுமாகும்..

bluestacks-software-to-use-android-apk-in-windows-mac-pc-laptop


மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய:download bluestacks for mac and windows pc

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி? 


  • முதலில் புளூஸ்டாக் மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.
  • தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவ, புளூஸ்டாக் மென்பொருளைத் திறந்து அதில் உள்ள search box -ல் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரைக் கொடுத்து சர்ச் செய்ய வேண்டும்.
  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனின் சரியான பெயரை கொடுத்து தேடினால் அந்த அப்ளிகேஷன் புளூஸ்டாக் மென்பொருளில் காட்டும். காட்டுகிற அந்த ஆண்ட்ராய் அப்ளிகேஷன் மீது கிளிக் செய்தால் தானாகவே அந்த அப்ளிகேஷன் ரன் ஆகத்தொடங்கிவிடும். 
  • அல்லது நீங்கள் தரவிறக்கம் செய்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் மீது ரைட் கிளிக் செய்து ஓப்பன் வித் ப்ளூஸ்டாக் என்பதைத் தேர்ந்தெடுக்க அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும். 

HOW TO CHECK YOUR PEN DRIVE ORIGINAL OR FAKE....?

Pen drives used to store the music, videos or any other data. pen drives are most portable Storage device for many peoples because its very portable other than devices. Now Flash drives also manufactured as fake drives and looks like original one. Theseduplicate pen drives imported from china and selling by some peoples in India. They are selling these pen drives at low price. Even 256 GB Flash drives sold for 500 Rs. On computer, it will display only fake size of pen drives. Generally its capacity within 4 GB only and that made with small programs to show bigger capacity. When you copy the files larger than 2 GB, it will struggle to work and dead. So how to check your pen drive is original or fake.

1. H2Testw is worthy software to check a flash drive is original or not. You can check SD cards and various types of memory cards also. Download this software here.
2. Unzip/Extract the file and run the application file.
3. Before checking a pen drive, empty the files and folders.
4. Click Target device and select your removable device.
5. Click Write+Verify button and wait for your pen drive being checked.
5. If your pen drive is verified as original one, it will be displayed as “Test finished without errors”

6. If your pen drive is fake one, it will be displayed as “The media is likely to be defective


This software displays read/write speed and errors of your usb drive. If your usb device is damaged, you will see some errors. you can select also internal hard disk drives for this verifying method.

Prevent to buy fake pen drives:

• Don’t buy pen drives from unfamiliar persons.
• Don’t buy flash drives via online websites. The fake flash drives listed in Ebay.com also with original brand names like as Sony, Kingston, Transcend and etc.
• Buy only in branded stores and good shops you already known.


கணினியில் தரவு COPY ஆகும் வேகத்தை அதிகரிகலாம் வாங்க..

எக்ஸ்ட்ரீம் கொபி புரோ 2.2.2 எளிய மிகவும் வேகமாக மற்றும் சிறந்த மென்பொருள்


இது  விண்டோஸ் கையாளும் போது மற்ற நேரங்களை  விட 20% ~ 120% வேகம் வரை அதிகரிக்க முடியும் நகலெடுத்து கோப்புகள் மற்றும் கோப்புறைகள் நகர்த்த முடியும் என்பது இதன்  ஒரு பயன்பாடு ஆகும். 
இது போன்ற மிகவும் ஆனால் விண்டோஸ் இயல்பாக பிரதியை கையாளுதல் என எளிதாக இடைநிறுத்தம் பிரதி செயல்முறை பிழை மீட்பு மற்றும் சில சக்தி வாய்ந்த அம்சங்கள் உள்ளன

 

என்ன நன்மைகளை  நீங்கள்  ExtremeCopy இருந்து பெற முடியும்?


வழக்கமான நேரங்களை விட  நகல் அல்லது மற்றொரு வன் அல்லது USB டிரைவ் அல்லது கணினி சாப்ட்வேர் எளிதாக உங்கள் பிரதியை பணியை நிர்வகிக்க போது இவ்வளவு நேரம் காக்க வேண்டிய தேவை இல்லை .  மற்றும் திறமையாக மற்றும் அதிக சக்தி வாய்ந்த இந்த மென்பொருள் மூலம்  உங்கள் கோப்பு (கள்) / கோப்புறை (கள்) நகர்த்த முடியும்.

http://www.tusfiles.net/f04zos72xsfk

விண்டோஸ் 10 இயங்குதளம் - முழு தகவல்



ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது.
பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். 

மைக்ரோசாப்ட் நிறுவனமும் "Windows Threshold" என்ற குறியீட்டுப் பெயரில், வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் உள்ளடக்கிய புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இறங்கியது. இது குறித்து பல புதிய தகவல்கள் கசிந்தன. அனைவரும் இது விண்டோஸ் 9 அல்லது வேறு ஒரு பெயரில் (WindowsTH ("Windows Threshold"), Windows X, Windows One) என வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்ற மாத இறுதியில், மைக்ரோசாப்ட் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ''விண்டோஸ் 10'' என்ற பெயருடன் வெளியிட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு, அங்கு தரப்படும் வை பி இணைப்பைப் பயன்படுத்தத் தேவையான பாஸ்வேர்ட் “Windows2015” என அறிவிக்கப்பட்டது. அதனால், அனைவரும், வர இருக்கும் விண்டோஸ் சிஸ்டம் பெயர் விண்டோஸ் 2015 எனவே எண்ணி இருந்தனர். ஆனால், ''விண்டோஸ் 10'' என எதிர்பாராத பெயர் அறிவிக்கப்பட்டது. இதில், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

இந்த அறிமுக விழா, இதுவரை, கடந்த 20 ஆண்டுகளில், விண்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்ட விழாக்களுக்கு மாறான முறையில் இருந்தது. இந்த விழாவில் நமக்குக் கிடைத்த புதிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ஏன் விண்டோஸ் 10?


இந்த புதிய வெளியீட்டிற்கு, இயற்கையான தொடர் எண்ணாக 9 தான் இருந்திருக்க வேண்டும். இதனை வடிவமைத்த குழுவின் தலைவரான டெர்ரி மையர்சன் பேசுகையில், இது கடந்த கால விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் தொடர்ச்சி அல்ல. முற்றிலும், முற்றிலும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். எனவே தான், தொடர் எண்ணாக இல்லாமல் விண்டோஸ் 10 என இது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மட்டுமின்றி, இணையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து சாதனங்களிலும் (வீட்டு பொருட்கள் உட்பட), பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., எக்ஸ் பாக்ஸ், க்ளவ்ட் இயக்க சாதனங்கள் என அனைத்திலும் இயங்கக் கூடியதாக இருக்கும். எனவே தான், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டதாக இதற்கு விண்டோஸ் 10 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரே மேடையும் வேறுபாடான அனுபவமும்


வெவ்வேறு தன்மையுள்ள, இயக்கம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பயனாளர்களைப் பொறுத்த வரை வேறுபட்ட அனுபவத்தினையே இந்த சிஸ்டம் தரும். மொபைல் போன், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கென வெவ்வேறு இடைமுகங்களை (Interfaces) இந்த சிஸ்டத்திற்கென, தனி குழு வடிவமைத்து வருகிறது. ஒரே ஸ்டோர் தரும் ஒரே கட்டமைப்பு இயக்கமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களுக்கேற்ப அனுபவத்தினைப் பெறுவார்கள். இதுவரை மைக்ரோசாப்ட் தந்ததில் இதுவே, அனைத்தையும் அரவணைத்து இயங்கும் சிஸ்டமாக இருக்கும். 

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு


விண்டோஸ் 10 மூலம், தன் நிறுவன வாடிக்கையாளர்களை, குறிப்பாக பெரிய அளவில் தங்கள் நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில் விண்டோஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மைக்ரோசாப்ட் நிறைவேற்றியுள்ளது. விண்டோஸ் 8 மூலம் பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், இழப்பையும் கொடுத்தது. எனவே தான், விண்டோஸ் 10 மூலம் இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மைக்ரோசாப்ட் அதிக முயற்சிகளை எடுத்து, புதிய சிஸ்டத்தினை வடிவமைத்துள்ளது. இந்த பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நான்கு பிரிவுகளில் நிறைவேற்றியுள்ளது. தங்கள் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையினை மேம்படுத்துகையில், நிறுவனங்கள், புதிய முறைமை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு, நன்றாகப் பழகிய ஒன்றாகவே இருக்க வேண்டும்; ஏற்கனவே இயங்கிய முறைமைக்கு எந்த விதத்திலும் இணைவாக, இசைவாக இல்லாமல் இருக்கக் கூடாது. புதிய முறைமையினால், கூடுதல் திறன் கிடைக்க வேண்டும். உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும். மேலும், நிர்வாகத்தில் புதியதாக உருவாகி வரும் திறன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மொபைல் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில், புதிய சிஸ்டம் துணையாக இருக்க வேண்டும். புதிய சாதனங்களோடு, பழைய சர்வர்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுடனும் இது இணைவாகச் செயல்பட வேண்டும். 

விண் 7 மற்றும் 8 மேம்பாடு


இந்த புதிய விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் 8 பயன்படுத்துவோர் எளிதாக அப்கிரேட் செய்திடும் வகையில் தரப்படுகிறது. இந்த இரண்டு சிஸ்டம் பயன்படுத்துவோர் என்ன என்ன எதிர்பார்க்கின்றனரோ, அவை அனைத்தையும் தருவதில் விண்டோஸ் 10 முயற்சி செய்துள்ளது. விண்டோஸ் 7 பயன்படுத்துவோர், ஸ்டார்ட் மெனு, டாஸ்க்பார் மற்றும் டெஸ்க்டாப் வசதிகளைப் பெறுவார்கள். விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், அது தொடு உணர் திரையாகவோ, அது இல்லாமலோ இருந்தாலும், ஸ்டார்ட் ஸ்கிரீன் பெறுவார்கள். டச் இண்டர்பேஸ் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக்கப்படும். விண்டோஸ் 10ல், உலகளாவிய தேடலை இணையம் வழி மேற்கொள்ள தேடல் கட்டம் தரப்படுகிறது. 

வழக்கமாக புதிய சிஸ்டங்கள் உருவாக்கப்படுகையில் பில்ட் எண் (Build number) ஒன்று அதற்கு வழங்கப்படும். விண் 10 சிஸ்டம் காட்டப்படுகையில் அது 9841 ஆக இருந்தது. முழுமையாக வெளிவரும்போது இதுவாக இருக்கலாம்; அல்லது வேறாக இருக்கலாம்.

சில சிறிய புதிய வசதிகள்


அப்ளிகேஷன்களை அப்படியே தள்ளி வைத்திட Snap என்னும் டூல் தரப்பட்டது. இது மேம்படுத்தப்பட்டு, Snap Assist UI என்ற பெயரில், அப்ளிகேஷன்களை அடுத்த திரைக்குத் தள்ளிவைக்கும் எளிய வேலையை மேற்கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. கட்டளைப் புள்ளி (command prompt) வழியேயும், நாம் இதுவரை பரவலாகப் பயன்படுத்தும் ஷிப்ட் கட்டளைகள் மற்றும் CTRL + C போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கைவிடப்படும் டூல்கள்


Charms டூல் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய யூசர் இண்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல Switcher டூல் இல்லாமல் போனாலும், விண் 8ல், இடது புறத்திலிருந்து ஸ்வைப் செய்கையில், ALT + TAB க்கான செயல்பாட்டினைப் பெறலாம்.

புதிய டூல்


விண்டோஸ் 8ல், மெட்ரோ மற்றும் வழக்கமான டெஸ்க்டாப் இடைமுகத்திற்கும் நம்மால் எளிதாக மாற்றிக் கொள்ள முடிந்தது. இதனை Continuum என்ற டூல் மூலம், அனைத்து வகை சாதனங்களிலும் இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் தந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்


ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினை அமைத்து இயக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் வழி தருகிறது. ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும், நமக்குத் தேவைப்படும் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒரே நேரத்தில் இயக்கலாம். இதனால் வேலை விரைவில் முடியும். 

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தொழில் நுட்ப முன் சோதனைக்கான பதிப்பினை மைக்ரோசாப்ட் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. இதனை  இந்த முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பெற்று, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்திப் பார்க்கலாம். பன்னாடுகளில் இருந்து கிடைக்கும், பின்னூட்டங்களின் அடிப்படையில், விண்டோஸ் 10 இயக்க முறைமை சீர் செய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

அநேகமாக, அடுத்த ஆண்டின் நடுவில், இது பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா என்பதற்கான விடையை, மைக்ரோசாப்ட் நிறுவன நிர்வாகிகள் எவரும் கூறவில்லை. ஆனால், விண்டோஸ் வாடிக்கையாளர்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகத் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல, விண்டோஸ் 10 க்கான விலை குறித்தும், இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.