Facebook ல் சேமிப்பு (Save) பொத்தான்!

முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக சேமிக்கும் வசதியை கொண்டு வந்திருக்கிறது முகப் புத்தகம்.
எவற்றை சேமிக்கலாம்?
இணைப்புகள், திரைப்படங்கள், இசை மற்றும் இடங்கள்
IntroducingSave
எப்படி சேமிப்பது?
முறை 1 :  சேமிக்க வேண்டிய இணைப்பிற்கு வலது மூலையில் காணப்படும் கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தி, பின் தோன்றும் பட்டியலில் Save என்பதை தெரிவு செய்யுங்கள்.
Facebook_save
முறை 2 :
இணைப்பின் மேல் செல்லும் போது அது தொடர்பாக தோன்றும் பெட்டியில் Save என்ற பொத்தனை அழுத்துங்கள்.
Facebook_save2

சேமித்தவற்றை பார்ப்பது எவ்வாறு?
உங்கள் முகப் புத்தக தொடக்கப் பக்கத்திற்குச் சென்று இடது பக்கத்தில் காணப்படும் Saved என்ற இணைப்பை அழுத்தி நீங்கள் சேமித்தவற்றை பார்வையிடலாம்.
Facebook_save3
நீங்கள் சேமிப்பவற்றை நீங்கள் பகிராவிட்டால், நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். அத்துடன் iOS மற்றும் Android இயங்கு தளங்களைக் கொண்ட கைத் தொலைபேசிகளிலும் பார்க்க முடியும்.