ஒரு கோடி மதிப்புள்ள கீபோர்டு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான் »

ar_rahman_1375260847_540x540
ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள புதிய கீ-போர்டு ஒன்றை வாங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். லிங்கா படத்தின் பின்னணி இசையைக்கு அதை பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் பாடல்கள் கம்போசிங்கில் பிஸியாக இருந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.வீட்டில் உள்ளவர்கள் ஆடி கார் வாங்கலாம் என்று யோசனை சொன்னார்களாம். அல்லது வேறு ஏதாவது விலை உயர்ந்த பொருளை வாங்கலாம் எனவும் திட்டமிட்டார்களாம். ஆனால், இசை சுவாசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானோ கீ-போர்டு வாங்க முடிவுசெய்தாராம்.
வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்’, ஷங்கர் இயக்கும் ‘ஐ’, ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’, கௌதம் மேனன் இயக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ என வரிசையாக இந்த வருடம் இசை விருந்து படைக்க இருக்கிறார் இசைப் புயல். மேலும் ஆறு இந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
சமீபமாக ‘இசை’ என்ற படத்திற்கு இசையமைத்து வரும் எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்து அதன் பாடல்களை போட்டுக்காட்ட, எஸ்.ஜே.சூர்யா இசையமைத்த பாடல்களைக் கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அவரை பாராட்டினாராம்...