மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை . புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான புகைப்படங்களும் தான். காமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம்.
காமிரா போன் யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல புகைப்படங்கள் இருக்கலாம். இதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது. மங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.
இணையத்தளத்திற்கு செல்ல:http://smartdeblur.net/
போட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரண புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள். அதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது. இதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் . இதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும். கட்டண சேவையும் இருக்கிறது.