எம்முடன், நாமே பேசலாம்!

கணினிக்கு மனித இயல்புகள் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக நாம் Type செய்த சொற்களை வாசிக்கும் மென்பொருள்கள் பல, சாதாரணமாக புழக்கத்தில் காணப்படுகின்றன.

இம்முறை நாம் அறியவுள்ள Crazy Talk எனும் மென்பொருள் மிகவும் வித்தியாசமான பண்புகளைக் கொண்டுள்ளது. நாம் Type செய்யும்Text களை, மென்பொருளிலுள்ள சில உருவங்கள் வாயை அசைப்பதன் மூலம் கதைத்துக் காட்டும். அவ்வுருவங்களுக்கு ஏற்ப குரலும், உச்சரிப்புக்கு ஏற்ப உருவங்களின் வாயசைவும் பொருத்தமான வகையில் காட்சியாகும்.

நாம் Type செய்யும் வசனங்களை மட்டுமல்லாது, Microphone மூலம் நாம் கதைக்கும் சத்தங்களுக்கேற்பவும் தமது முக அசைவுகளைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. இம் மென்பொருளிலே, Model என குறிப்பிடப்படும் வகையில் சில உருவங்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து, நாம் Type செய்யும் சொற்களை அல்லது நாம் Record செய்த ஒலிகளை, அவற்றின் முகவாய் அசைவுகளின் மூலம் கேட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு Output ஆக பெறப்படும் Model களின் சொற்களிற்கேற்ப காட்டப்படும் அசைவூட்டத்தை .exe கோப்பாக மாற்றி, எமது நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளலாம். .exe கோப்பாக மாற்றி பகிர்வதனால், அக்கோப்பினை open செய்ய, Crazy Talk மென்பொருள் கணினியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் வழங்கும் ஒலியை அல்லது Type எழுத்துக்களை உச்சரிக்கும் உருவத்தோடு அமைந்த இடைமுகம்
எமது நிழற்படம் அல்லது நாம் விரும்பியவரின் நிழற்படத்தை குறித்த Model இற்கு பதிலாக பிரதியிட்டு வாய், மற்றும் கண் ஆகியவற்றின் அமைவை சரிசெய்தால், நாம் வழங்கிய நிழற்படம் நிஜமாகவே கதைப்பதை இம் மென்பொருளால் சாத்தியமாக்கலாம். நமது நிழற்படங்கள், முகவசைவுகளைக் காட்டி வார்த்தைகளை உச்சரிக்கும் முறை மிகவும் சுவாரசியமாக அமையும். 

ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பை மிக நுணுக்கமாகவும், மிகச் சரியாகவும், ஒலிவடிவிலும், முக அசைவிலும், காட்டுவதால், மொழியின் பாவனை தொடர்பில் பரிச்சயம் பெறுவதற்கும் இம்மென்பொருள் துணை புரியும் என்றே சொல்லாம்.
வெவ்வேறு நிழற்படங்களை முகவசைவுக்கேற்ப தொகுக்கும் இடைமுகம்  
இம் மென்பொருளை http://www.reallusion.com/crazytalk/ எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ள முடியும். நீங்களும் உங்கள் நிழற்படங்களை அல்லது நீங்கள் விரும்பியவர்களின் நிழற்படங்களை வழங்கி, அவை கதைப்பது போன்ற நிகழ்வை அனுபவிக்கலாமே!

Excel ல் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்..

ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
use facebook in excel sheet 
நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும் கண்டறிய முடியாத வசதியை Hardlywork.in எனும் தளம் தருகிறது. இது தோற்றத்தில் ஒரு எக்சல் ஷீட்டில் (MS-Excel Sheet) வேலை செய்வது போன்று காட்சியளிக்கும். ஆனால் இதில் உங்கள் Facebook NewsFeed, Wall, Messages, Likes, Comments என அனைத்தையும் எக்சல் ஷீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.
use facebook in excel sheet 

முதலில் Hardlywork.in தளத்திற்குச் சென்று ” Gimme dem spreadsheets” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Facebook ஐடி / பாஸ்வேர்டு கொடுத்து Login செய்யவும்.

E-tel அறிமுகம் செய்யும் super - fast Quad core Curiosity தொலைபேசிகள்

E-tel அறிமுகம் செய்யும் super - fast Quad core Curiosity தொலைபேசிகள்
Photo: Chinthana GSM - Maharagama | Opsell Phone Arcade - Malabe | Golden Mobile - Piliyandala | Soft Link - Nugegoda / Maradana | Laser Mobile - Athurugiriya | Thilakawardhana Cellular - Kiribathgoda | Nishantha Trade Center - Ja-Ela|Crystal Marketing - Negombo | Sawana Com Center - Nittambuwa | Suhada Computer Center - Gampaha |Champa Stores - Kandy | Indika Cellular - Matara | Dharshana Enterprises - Galle | Mobile Vision - Galle | Hemasiri Enterprises - Ambalangoda |SDS Phone Shop - Horana | Phone Arcade - Kalutara   Abeywarna Phone Shop - Middeniya | Orange Mobile - Kurunegala | Univercell Mobile - Trincomalee | FRS Communication - Samanthurai
உள்ளுர் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான வர்த்தக முத்திரையான E-tel இந்த முத்திரையின் முதலாவது Quad core புரோஸஸர் கொண்ட தொலைபேசிகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதன் மூலம் கையடக்க தொலைபேசிகளின் வேக வரிசையை தொடக்கி வைத்துள்ளது. 

E-tel curiosity N3 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வந்துள்ளன. இது அதி நவீன மீடியா டெக் சுபர் பாஸ்ட் 1.3கெகாஹெட்ஸ் வேகச் செயற்பாட்டுடன் அன்ட்ரோயிட் 4.2ஜெலி பீன் செயற்பாட்டு பொறிமுறையுடன் அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு மிக மிக அதி வேகமான செயற்பாட்டை இது வழங்குகின்றது. ஸ்மார்ட்போன் செயற்பாடுகளில் இதை ஒரு மைல் கல்லாகக் கருத முடியும் என்று இந்த போன்களை அறிமுகம் செய்யும் Brantel நிறுவனம் அறிவித்துள்ளது. 

இரட்டை சிம்களுடன் கூடிய மிக மெல்லிய கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இந்த தொலைபேசிகள் மைக்ரோ சிம் தளம் ஒன்றையும் கொண்டுள்ளன. HSPA> Wi-Fi / Wi-Fin ஹொட்ஸ்பொட், 4.5 அங்குல 16M வர்ண இணைப்புடன் தொடுகை முறையிலான IPS காட்சி வடிவத்தையும் கொண்டுள்ளன. பிலாஷ் உடன் கூடிய 8 MP தன்னியக்க தூர சீராக்கி பின் இணைப்பு கெமரா, புநழ-வயபபiபெ மற்றும் முகத்தை கொண்டு அடையாளம் காணும் வசதி, 2 MP முன் இணைப்பு கெமரா, என்பனவற்றையும் இது உள்ளடக்கியதாகும். இந்த வசதிகள் E-tel curiosity N3 தொலைபேசிகளை அதிநவீன பல்துறை வசதிகொண்ட தொலைபேசிகளாக்கியுள்ளன. தற்போது சந்தையில் உள்ள மிகவும் பிரபலமான முன்னணி ஸ்மார்ட்போன் வகைகளோடு; போட்டிமிக்க ஒரு அறிமுகமாகவும் இது மாறியுள்ளது என்று கம்பனி அறிவித்துள்ளது. 

´curiosity N3 போன் வகைகள் சந்தையில் ஒரு பாரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம்´ என Brantel நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பிஷ்ரி லத்தீப கூறினார். ´இதன் அதிசயிக்கத்தக்க விலையான 21900 ரூபா என்பதே இதை வெற்றிபெற வைக்கும் முக்கிய காரணியாக அமையும் எனவும் சிறந்த பண்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் வகைகளின் விலைகளுள் இது மிகச் சிறந்ததாக இருக்கின்றது´ என அவர் மேலும் கூறினார். 

E-tel போன்கள் Hong Kong ல் வடிவமைக்கப்பட்டு சீனாவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மூன்று உற்பத்தி நிலையங்களில் அவை தயாரிக்கப்படுகின்றன. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த பத்து முக்கிய உற்பத்தி நிலையஙகளின் வரிசையில் இடம் பிடித்துள்ள உற்பத்தி நிலையங்களாகும். அந்த நாடுகளுக்கான அதே உற்பத்தித் தரங்களுக்கு ஏற்ப இங்கு எல்லா உற்பத்திகளும் மேற் கொள்ளப்படுகின்றன. E-tel இன் மிகவும் முக்கியமான ஒரு ஸ்திரப்பாடு எதுவெனில் உலகளாவிய வர்த்தக முத்திரை சமநிலையைப் பேணி விலையை ஒரு பொருட்டாகக் கருதாது நியாயமான விலையில்; அதி நவீன தொழில்நுட்பத்தை வழங்கக் கூடிய அதன் பண்பாகும் என்று அவர் மேலும் விளக்கினார். 

E-tel curiosity N3 போன்களின் நினைவாற்றலை மைக்ரோ SD கார்ட் மூலம் 32 GB வரை விஸ்தரிக்கலாம். இதில் உள்ள 3G,Wi Fi புளுடூத், வசதிகள் மூலம் ஸ்கைப், யுடியூப், பேஸ்புக், ஜிமெயில், கூகுள் செட் என எல்லா வகையான சமூக இணையத் தளங்களோடும் தொடர்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு கூகுள் வரைபடமும் இதனோடு இணைக்கப்பட்டுள்ளதால் GPS வசதிகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எண்ணற்ற ஏனைய பல விடயங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இலங்கை முழுவதும் சுமார் இரண்டாயிரம் வர்த்தக விநியோக நிலையங்கள் மூலம் E-tel உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும். மேலும் கொழும்பு, அநுராதபுரம், கண்டி, மாத்தறை, நீர்கொழும்பு, குருணாகல்,மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு இடங்களில் Brantel நிறுவன நிலையங்களுடாக விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 

Brantel நிறுவனம் இலங்கையில் 2004 முதல் செயற்படுகின்றது. 2008ல் அது E-tel வர்த்தக முத்திரை உற்பத்திகளை அறிமுகம் செய்தது. E-tel முத்திரையின் கீழ் பல்வேறு வகையான போன்கன் உள்ளன. ஸ்மார்ட்போன் உற்பத்திகளுள் பிரபலமான பல உற்பத்திகளோடு போட்டியிட்டு E-tel சந்தையில் தனக்கென கணிசமான ஒரு இடத்தையும் பிடித்துள்ளது. உள்ளுர் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான வர்த்தக முத்திரையான E-tel இந்த முத்திரையின் முதலாவது Quad core புரோஸஸர் கொண்ட தொலைபேசிகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதன் மூலம் கையடக்க தொலைபேசிகளின் வேக வரிசையை தொடக்கி வைத்துள்ளது. 

E-tel curiosity N3 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வந்துள்ளன. இது அதி நவீன மீடியா டெக் சுபர் பாஸ்ட் 1.3கெகாஹெட்ஸ் வேகச் செயற்பாட்டுடன் அன்ட்ரோயிட் 4.2ஜெலி பீன் செயற்பாட்டு பொறிமுறையுடன் அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு மிக மிக அதி வேகமான செயற்பாட்டை இது வழங்குகின்றது. ஸ்மார்ட்போன் செயற்பாடுகளில் இதை ஒரு மைல் கல்லாகக் கருத முடியும் என்று இந்த போன்களை அறிமுகம் செய்யும் Brantel நிறுவனம் அறிவித்துள்ளது. 

இரட்டை சிம்களுடன் கூடிய மிக மெல்லிய கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இந்த தொலைபேசிகள் மைக்ரோ சிம் தளம் ஒன்றையும் கொண்டுள்ளன. HSPA> Wi-Fi / Wi-Fin ஹொட்ஸ்பொட், 4.5 அங்குல 16M வர்ண இணைப்புடன் தொடுகை முறையிலான IPS காட்சி வடிவத்தையும் கொண்டுள்ளன. பிலாஷ் உடன் கூடிய 8 MP தன்னியக்க தூர சீராக்கி பின் இணைப்பு கெமரா, புநழ-வயபபiபெ மற்றும் முகத்தை கொண்டு அடையாளம் காணும் வசதி, 2 MP முன் இணைப்பு கெமரா, என்பனவற்றையும் இது உள்ளடக்கியதாகும். இந்த வசதிகள் E-tel curiosity N3 தொலைபேசிகளை அதிநவீன பல்துறை வசதிகொண்ட தொலைபேசிகளாக்கியுள்ளன. தற்போது சந்தையில் உள்ள மிகவும் பிரபலமான முன்னணி ஸ்மார்ட்போன் வகைகளோடு; போட்டிமிக்க ஒரு அறிமுகமாகவும் இது மாறியுள்ளது என்று கம்பனி அறிவித்துள்ளது. 

´curiosity N3 போன் வகைகள் சந்தையில் ஒரு பாரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம்´ என Brantel நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பிஷ்ரி லத்தீப கூறினார். ´இதன் அதிசயிக்கத்தக்க விலையான 21900 ரூபா என்பதே இதை வெற்றிபெற வைக்கும் முக்கிய காரணியாக அமையும் எனவும் சிறந்த பண்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் வகைகளின் விலைகளுள் இது மிகச் சிறந்ததாக இருக்கின்றது´ என அவர் மேலும் கூறினார். 

E-tel போன்கள் Hong Kong ல் வடிவமைக்கப்பட்டு சீனாவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மூன்று உற்பத்தி நிலையங்களில் அவை தயாரிக்கப்படுகின்றன. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த பத்து முக்கிய உற்பத்தி நிலையஙகளின் வரிசையில் இடம் பிடித்துள்ள உற்பத்தி நிலையங்களாகும். அந்த நாடுகளுக்கான அதே உற்பத்தித் தரங்களுக்கு ஏற்ப இங்கு எல்லா உற்பத்திகளும் மேற் கொள்ளப்படுகின்றன. E-tel இன் மிகவும் முக்கியமான ஒரு ஸ்திரப்பாடு எதுவெனில் உலகளாவிய வர்த்தக முத்திரை சமநிலையைப் பேணி விலையை ஒரு பொருட்டாகக் கருதாது நியாயமான விலையில்; அதி நவீன தொழில்நுட்பத்தை வழங்கக் கூடிய அதன் பண்பாகும் என்று அவர் மேலும் விளக்கினார். 

E-tel curiosity N3 போன்களின் நினைவாற்றலை மைக்ரோ SD கார்ட் மூலம் 32 GB வரை விஸ்தரிக்கலாம். இதில் உள்ள 3G,Wi Fi புளுடூத், வசதிகள் மூலம் ஸ்கைப், யுடியூப், பேஸ்புக், ஜிமெயில், கூகுள் செட் என எல்லா வகையான சமூக இணையத் தளங்களோடும் தொடர்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு கூகுள் வரைபடமும் இதனோடு இணைக்கப்பட்டுள்ளதால் GPS வசதிகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எண்ணற்ற ஏனைய பல விடயங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இலங்கை முழுவதும் சுமார் இரண்டாயிரம் வர்த்தக விநியோக நிலையங்கள் மூலம் E-tel உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும். மேலும் கொழும்பு, அநுராதபுரம், கண்டி, மாத்தறை, நீர்கொழும்பு, குருணாகல்,மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு இடங்களில் Brantel நிறுவன நிலையங்களுடாக விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 

Brantel நிறுவனம் இலங்கையில் 2004 முதல் செயற்படுகின்றது. 2008ல் அது E-tel வர்த்தக முத்திரை உற்பத்திகளை அறிமுகம் செய்தது. E-tel முத்திரையின் கீழ் பல்வேறு வகையான போன்கன் உள்ளன. ஸ்மார்ட்போன் உற்பத்திகளுள் பிரபலமான பல உற்பத்திகளோடு போட்டியிட்டு E-tel சந்தையில் தனக்கென கணிசமான ஒரு இடத்தையும் பிடித்துள்ளது. 

டைட்டானிக் கப்பல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...

உலகின் மிகவும் ஆடம்பர கப்பலாக வர்ணிக்கப்படும் டைட்டானிக் இப்போதுள்ள எந்தவொரு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஏராளமான வசதிகள் கொண்டதாகவும் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றபோது தனது கன்னிப் பயணத்திலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது.
நூற்றாண்டை கடந்துவிட்டாலும், 1500 பயணிகளை பலி வாங்கிய இந்த விபத்தை உலகின் மிக மோசமான கடல் விபத்தாக கூறப்படுகிறது. டைட்டானிக் கப்பலின் ஆடம்பரத்தையும், அந்த கோர விபத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக டைட்டானிக் திரைப்படமும் வெளிவந்து நம் உள்ளங்களை உலுக்கியது. இந்த நிலையில், டைட்டானிக் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.
கடல் ராணி என்றழைக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 3,547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2,223 பேர் பயணித்தனர். உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1,517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணமாக கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பலில்தான் முதன்முறையாக தொலைபேசி வசதியுடன், மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

டைட்டானிக் கப்பலின் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 800 டன் நிலக்கரி தேவைப்பட்டது.

புகைப்போக்கி குழாயின் உயரத்தை சேர்த்து அளவிடும்போது டைட்டானிக் கப்பல் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையாக இருந்தது.

மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையான நீளத்தை கொண்டது டைட்டானிக்.
மணிக்கு 23 நாட்டிக்கல் மைல் வேகம், அதாவது மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. விபத்துக்குள்ளானபோதும், அதிகபட்ச வேகத்தில் சென்றதாலேயே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலை நிறுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.

டைட்டானிக் கப்பலில் 4 லிஃப்ட்டுகள், தண்ணீரை வெப்பமூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 2 நூலகங்கள் மற்றும் 2 முடிதிருத்தும் நிலையங்கள் இருந்தன.
நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் குடிநீர் தேவைப்பட்டது.

டைட்டானிக் கப்பலில் 4 புகைப்போக்கி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், மூன்று மட்டுமே புகை வெளியேற்றுவதற்கானது. மீதமுள்ள ஒன்று அழகுக்காக பொருத்தப்பட்ட டம்மி புகைப்போக்கி குழாய்.
டைட்டானிக் கப்பலில் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில், முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை இப்போதைய மதிப்புக்கு ஒப்பிட்டால் 99,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 50 லட்சத்துக்கும் அதிகம்.

நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40 டன் உருளைக் கிழங்கு, 7,000 முட்டைகோஸ்கள், 3,500 பவுண்ட் வெங்காயம், 36,000 ஆப்பிள்கள் மற்றும் 1,000 பிரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களாக தேவைப்பட்டது.

சீயானுக்கு சீயான்!

'ஐ’ படத்துக்காக பல கிலோக்கள் எடை குறைந்த சீயானுக்கே சீயான் ஒருவர் ஹாலிவுட்டில் இருக்கிறார் தெரியுமா? சொல்லப்போனால், சீயானுக்கே இந்த உடல் குறைப்பு மேட்டரில் சார்தான் ரோல்மாடல். இதுவரை உடல் எடை கூட்டியும் குறைத்தும் இவர் அளவுக்கு யாரும் ரிஸ்க் எடுத்தது இல்லை என அகில உலக அளவில் கொண்டாடப்படுகிறார். அவர், 40 வயதான கிறிஸ்டியன் பேல்.
சர்க்கஸ் வீரரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஏழை அம்மாவுக்கும் தென் ஆப்பிரிக்காவில் கமர்ஷியல் பைலட்டாக இருந்த தந்தைக்கும் மகனாகப் பிறந்தவர். 16 வயதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு டி.வி விளம்பரங்களில் நடித்தவர், 13-வது வயதிலேயே மோதிரக் கையால் குட்டு வாங்கி விட்டார். ஆம். 1987-ல் தன் 'எம்பயர் ஆஃப் தி சன்’ (Empire of the Sun)  படத்தில் வாய்ப்புக் கொடுத்தது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.  இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய முகாமில் மாட்டித் தவிக்கும் இளைஞனாக நடிப்பில் மிரட்டியிருந்தார். உடனே வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தது 2000-ம் ஆண்டில் பேட்ரிக் பேட்மேன் இயக்கத்தில் நடித்த 'அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) படம்தான். சைக்காலஜிகல் த்ரில்லர் படமான 'அமெரிக்கன் சைக்கோ’ இவருடைய நடிப்பில் புதுப் பரிமாணத்தை வெளிக்காட்டியது.
அதன் பிறகு 2004-ல் 'தி மெஷினிஸ்ட்’ (The Machinist)  என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக கேரக்டருக்காக மெனக்கெடும் 'மெத்தட் ஆக்டர்’ என்ற பட்டம் கிடைத்தது. ஏனென்றால் 63 பவுண்டுகள், அதாவது 28 கிலோ எடையைக் குறைத்தார். 55 கிலோவுக்கும் குறைவாக எடை இருந்ததால், ஆளே பார்க்க எலும்புக்கூடாகக் காட்சி அளித்தார். இன்சோம்னியாவால் பீடிக்கப்பட்டு வேலை இழந்த ஒரு தொழிலாளியின் கதை என்பதால், கேரக்டராகவே மாறிப்போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தார். அது மட்டுமல்ல. உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வந்த அகில உலக பாப்புலர் பேட்மேன் படங்களான பேட் மேன் பிகின்ஸ்(Batman Begins) (2005), தி டார்க் நைட்(The Dark Knight)(2008), தி டார்க் நைட் ரைஸஸ் (The Dark Knight Rises) (2012)படங்களில் 'மெக்கோ’ உடற்கட்டோடு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து மிரட்டி இருந்தார்.
2010-ல் ரிலீஸான 'தி ஃபைட்டர்’ படத்தில் மீண்டும் 86 கிலோவிலிருந்து 66 கிலோவுக்குத் தன் எடையைக் குறைத்தார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே அப்படியே ஆளே மாறி வந்து நிற்பார். 2012-ல் 'தி டார்க்நைட் ரைஸஸ்’ படத்தில் 90 கிலோவுடன் செம மேன்லியாக நடித்து இருந்தார். 2013 டிசம்பரில் ரிலீஸான, 'அமெரிக்கன் ஹஸில்’ படத்தில் சற்று உடல் வெயிட் போட்டுத் தொப்பை ஆசாமியாக மாறி இருக்கிறார். 10 அகாடமி அவார்டுக்காக அந்தப் படம் நாமினேட் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 43 பவுண்டுகள் தன் எடையை ஏற்றியிருக்கிறார். செயற்கையாகக் கொஞ்சம் உடலைப் பின்புறமாக வளைத்து மூன்று இஞ்ச்கள் உடல் உயரத்தையும் கம்மியாக்கி ஆளே மாறிவிட்டார்.
முதல் நாள் ஷூட்டிங் போனவரை பிரபல நடிகர் ராபர்ட் டி நீரோவிடம் படத்தின் இயக்குநர் அறிமுகப்படுத்திவைத்தபோது, 'யார் இந்த மனிதர்?’ என்று கேட்டவர், பின்பு உண்மை தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
விருதுகள் காத்திருக்கின்றன தல!

அமெரிக்காவின் இராணுவ பலத்தை பாருங்க...!

இன்றைக்கு உலகையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரே நாடு எது என்றால் அது அமெரிக்கா தான் உலகை மிரட்டுவது என்பது சாதாரண செயல் அல்ல.
அதற்கு முழு இராணுவ பலத்தையும் பெற்று இருக்க வேண்டும் இதோ இதுதாங்க அமெரிக்காவின் முழு இராணுவ பலம். இது இருப்பதால் தான் அமெரிக்கா உலகை மிரட்டி வருகிறது இதோ அமெரிக்க இராணுவ வீரர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்...