எம்முடன், நாமே பேசலாம்!

கணினிக்கு மனித இயல்புகள் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக நாம் Type செய்த சொற்களை வாசிக்கும் மென்பொருள்கள் பல, சாதாரணமாக புழக்கத்தில் காணப்படுகின்றன.

இம்முறை நாம் அறியவுள்ள Crazy Talk எனும் மென்பொருள் மிகவும் வித்தியாசமான பண்புகளைக் கொண்டுள்ளது. நாம் Type செய்யும்Text களை, மென்பொருளிலுள்ள சில உருவங்கள் வாயை அசைப்பதன் மூலம் கதைத்துக் காட்டும். அவ்வுருவங்களுக்கு ஏற்ப குரலும், உச்சரிப்புக்கு ஏற்ப உருவங்களின் வாயசைவும் பொருத்தமான வகையில் காட்சியாகும்.

நாம் Type செய்யும் வசனங்களை மட்டுமல்லாது, Microphone மூலம் நாம் கதைக்கும் சத்தங்களுக்கேற்பவும் தமது முக அசைவுகளைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. இம் மென்பொருளிலே, Model என குறிப்பிடப்படும் வகையில் சில உருவங்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து, நாம் Type செய்யும் சொற்களை அல்லது நாம் Record செய்த ஒலிகளை, அவற்றின் முகவாய் அசைவுகளின் மூலம் கேட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு Output ஆக பெறப்படும் Model களின் சொற்களிற்கேற்ப காட்டப்படும் அசைவூட்டத்தை .exe கோப்பாக மாற்றி, எமது நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளலாம். .exe கோப்பாக மாற்றி பகிர்வதனால், அக்கோப்பினை open செய்ய, Crazy Talk மென்பொருள் கணினியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் வழங்கும் ஒலியை அல்லது Type எழுத்துக்களை உச்சரிக்கும் உருவத்தோடு அமைந்த இடைமுகம்
எமது நிழற்படம் அல்லது நாம் விரும்பியவரின் நிழற்படத்தை குறித்த Model இற்கு பதிலாக பிரதியிட்டு வாய், மற்றும் கண் ஆகியவற்றின் அமைவை சரிசெய்தால், நாம் வழங்கிய நிழற்படம் நிஜமாகவே கதைப்பதை இம் மென்பொருளால் சாத்தியமாக்கலாம். நமது நிழற்படங்கள், முகவசைவுகளைக் காட்டி வார்த்தைகளை உச்சரிக்கும் முறை மிகவும் சுவாரசியமாக அமையும். 


ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பை மிக நுணுக்கமாகவும், மிகச் சரியாகவும், ஒலிவடிவிலும், முக அசைவிலும், காட்டுவதால், மொழியின் பாவனை தொடர்பில் பரிச்சயம் பெறுவதற்கும் இம்மென்பொருள் துணை புரியும் என்றே சொல்லாம்.
வெவ்வேறு நிழற்படங்களை முகவசைவுக்கேற்ப தொகுக்கும் இடைமுகம்  
இம் மென்பொருளை http://www.reallusion.com/crazytalk/ எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ள முடியும். நீங்களும் உங்கள் நிழற்படங்களை அல்லது நீங்கள் விரும்பியவர்களின் நிழற்படங்களை வழங்கி, அவை கதைப்பது போன்ற நிகழ்வை அனுபவிக்கலாமே!