ரூடிங் (Rooting) என்றால் என்ன :
ஆண்டுராய்டு உலகில் இந்த சொல்லியல்(Terminology) மிகப் பிரபலம் .எதற்காக நமது மொபைலை ரூட் செய்ய வேண்டும் , ரூடிங் என்றால் என்ன , ரூடிங் செய்வதால் என்ன பயன்கள் , மேலும் ரூடிங் செய்வதனால் நமது மொபைலுக்கு எவ்விதமான பாதிப்பு நேரலாம் என்பதைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம் .
ரூடிங் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
- முக்கியமாக கவனிக்க வேண்டியது , ரூடிங் செய்வதனால் உங்களது வாரண்டி /காரண்டி பாதிக்குமா என கண்டறிய வேண்டும் .உங்களது மொபைல் சேவை மையத்தை தொடர்பு கொண்டு நீங்கள் இந்த தகவலை அறியலாம் .
- பிரிக்கிங் (Bricking ) : ரூடிங்கை முறையாக செய்யாவிடில் நமது மொபைல் பிரிக் (brick) போன்று பயனற்று போகும் அதாவது நமது மொபைலின் மென்பொருள் (சாப்ட்வேர்) பழுதாகி நமது மொபைலை பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது .அதனால் மிகவும் எச்சரிக்கையாக ரூடிங் செய்ய வேண்டும்.உங்களுக்கு சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் நீங்கள் இந்த முறையை செய்ய வேண்டாம். இதற்கு மேலும் நீங்கள் ரூடிங் செய்ய முடிவெடுத்தால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.
ரூடிங் என்றால் என்ன?
உங்களது மொபைலை ரூட் செய்வதனால் சூப்பர் யூசர் செய்யும் அனைத்து செயைல்களை செய்ய சாத்தியமாகும்.ரூடிங் செய்வதற்கு முன் இது சாத்தியம் இல்லை. மேலும் உங்களுக்கு பிடித்தமான கஸ்டம் ரோம் (Custom ROM ) பதிவேற்றம் செய்யலாம் , உங்களது மொபைலின் ஆற்றலை அதிகரிக்கலாம்,பேட்டரியின் சேமிப்பை நீடிக்கலாம் . ஒரு சில மென்பொருள்களை இன்ஸ்டால் (Install ) செய்வதற்கும் ரூடிங் செய்திருப்பது இன்றியமையாததாகும் .
ரூடிங் என்ற பெயர்க்காரணம் யூனிக்ஸ் - இல் (UNIX ) இருந்து மருவி வந்த சொல்லியல் ஆகும் .யுனிக்ஸில் சூப்பர் யூசர் எல்லா வித கோப்புகளை (file )மற்றும் போல்டர்களை (folder ) படிக்க/எழுத (Read /Write ) அனுமதி உண்டு .அதுபோன்று மொபைல் போனில் ரூடிங் செய்வதனால் நமது மொபைலில் உள்ள மென்பொருளை நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடியும்.நமது மொபைல் உற்பத்தியாளர் பொதுவாக இது போன்ற சூப்பர் யூசர் அனுமதி நமக்கு கொடுப்பது இல்லை.அதற்கும் ஒரு காரணம் உண்டு.நம்மில் எல்லாருக்கும் ரூடிங் போன்ற தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.அவ்வாறிருக்க எசகுபிசகாக எதாவது செய்து விட்டால் முன்பு கூறியவாறு நமது மொபைல் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம்.
ஆகையால் இது போன்ற காரணங்களால் எல்லா உற்பத்தியாளர்களும் அவர்கள் தயாரிக்கும் மொபைல்களை லாக் (lock ) செய்து வெளியிடுகிறார்கள் .
ஆப்பிள் போனில் இவ்வாறு செய்தால் அது ஜெயில் பிரேகிங்(Jailbreaking ) என்று கூறபடுகின்றது
ரூடிங் செய்வதால் ஏற்படும் பலன்கள் :
கஸ்டம் ரோம் (ROM ):
ரோம் (ROM ) நமது மொபைலை இயக்கும் முதன்மையான மென்பொருள் ஆகும்.இந்த மென்பொருள் நமது மொபைலின் உள்ளே உள்ள ரோம் சிப்பில் (chip ) உள்ளது .நாம் வாங்கும் எல்லா மொபைலிலும் தொழிற்சாலையில் இந்த மென்பொருள் பதிவேற்றம் (Load ) செய்யப்படுகின்றது . ஒவ்வொரு ஆன்டுராய்டு பதிப்பு (Android version ) வெளியிடப்படும் பொழுது நமது உற்பதியாளர் நமக்கு அந்த அப்டேட் (Update ) தருவார்கள் என்று கண்டிப்பாக கூற முடியாது. இதெற்கெல்லாம் நமக்கு ஒரே தீர்வு இந்த கஸ்டம் ரோம் .இணையதளங்களில் பலவிதமான ரோம் கிடைகின்றது.ஒவோன்றிலும் வேறுபட்ட செயல்திறன்கள் (Features ) உள்ளது .நமக்கு எந்தவிதமான ரோம் ஏற்றதோ நாம் அதை நமது மொபைலில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
செயல்திறன் /ஆற்றல் அதிகபடுத்தல் :
ரூட் செய்யபட்ட மொபைலில் இன்ஸ்டால் செய்வதற்கென்றே ஏராளமான ஆப்(App ) கிடைகின்றது .இவை பயன்படுத்துதல் மூலம் நமது மொபைலின் ஆற்றலை வெகுவாக அதிகரிக்கலாம் .மேலும் பாட்டரி ஆற்றலையும் அதிகரிக்க முடியும்
ஆண்டுராய்டின் புதிய பதிவுகள்
கூகிள் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு புதிய மென்பொருளின் பதிவை வெளியிடும்.ஒரு சில மொபைல்களுக்கு மட்டுமே இந்த பதிவை (version ) பதிவிறக்கம் செய்ய உற்பத்தியாளர் முடிவு மேற்கொள்வர் . மற்ற மொபைல்களுக்கு இந்த ரூடிங் செய்யதால் மட்டுமே இந்த புதிய பதிவை பெற முடியும்.
மேலும் சில பயன்கள் இருக்கும் அதே வேளையில் , சில தீமைகளும் உள்ளது.
முன்பு கூறியவாறு ப்ரிக்கிங் ஆக வாய்ப்புகள் உள்ளது , மேலும் சில வைரஸ் நுழையவும் வாய்ப்பு உள்ளது .
இவ்வாறாக ரூடிங் முறையை கவனமாக மேற்கொண்டால் நமக்கு ஏற்ற லேட்டஸ்ட் மென்பொருளை நமது மொபைலில் பெற்று பயன் பெறலாம்.