Google Search Engine Tips & Tricks..

கூகுள் சர்ச் என்ஜின் பயன்பாடுகள் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்.




கூகுள் சர்ச் என்ஜின் மூலம் நாம் நமக்கு தேவையான தகவல்களை எளிதாக மற்றும் விரைவாக பெற பெரிதும் உதவுகிறது. இணைய உலகில் அதிக தகவல்கள் கூகுள் சர்ச் என்ஜின் மூலமாக தேடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை இணைய தேடுபொறி மூலமாக எளிதாக பெற முடிகிறது. மேலும் எங்கும், எப்பொழுதும், எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர்,மொபைல்,டேபிலேட் போன்ற சாதனங்கள் மூலமாக தங்குதடையின்றி தகவல்களை விரைவாக பெறுகிறோம். இப்படி நமக்கு பெரிதும் உதவுகின்ற கூகுள் சர்ச் என்ஜின்னை சரியாக கையாண்டால் நாம் நமக்கு தேவையான தகவல்களை மிக சரியாக மற்றும் துல்லியமாக பெறமுடியும். எனவே, நான் உங்களுக்கு கூகுள் சர்ச் என்ஜின்னை பயன்படுத்தி எவ்வாறு மேம்படுத்தப்பட்ட முடிவுகளை பெறுவது என்று நாம் இப்பொழுது பார்க்கலாம்.


கூகுள் சர்ச் என்ஜின் டிப்ஸ் :
  • குறிப்பிட்ட இணையதளத்தை தேட : Site: website name (Site:google.com)
  • வார்த்தைகளுக்கு இலக்கண பொருள் அறிய(Information) : define: proper 
  • ஒரு நாட்டின் பண மதிப்பை மாற்ற(இந்தியா To அமெரிக்கா)  : rupee to dollar 
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் சத்துக்களை ஒப்பிட்டு பார்க்க(ஆப்பிள் Vs ஆரஞ்சு) : Apple vs grapes 
  • விமான பயண அட்டவணை பற்றி அறிய(சென்னை To மும்பை) : Chennai to Mumbai or click more -->flights on google search bar 
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் சத்து பட்டியல் பற்றி அறிய(ஆப்பிள்) : food apple 
  • நாட்டின் நேரத்தை அறிய : time india 
  • ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவுகளை வேறொரு அளவுகளில் மாற்ற(சென்டிமீட்டர் To மீட்டர்) : centimeter to meter 
  • ஒரு பொருளின் எடையை அதாவது கிராம் To கிலோகிராம் ஆக மாற்ற : grams to kg 
  • கால்குலேட்டர் பார்க்க : calculator  
  • ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்துகொள்ள (சென்னை,இந்தியா)  : weather in Chennai