ஃபேஸ்புக்கின் புதிய அலுவலகம்..

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் வியக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியாவில்(California) உள்ள மென்லோ பார்க்கில்(Menlo Park)சமூக வலைப்பின்னல் சேவை வழங்கும் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2012 ல் புதிய தலைமை அலுவலகத்தை உருவாக்கும் பணியை தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் பிரான்க் ஜெரி(Frank Gehry) இந்த அலுவலகத்துக்கான வடிவமைப்பை உருவாக்கினார். 


தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் 22 ஏக்கர் பரப்பில் 4,30,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இதன் கீழ் தளம், தனி அறைகள் இல்லாமல் பிரம்மாண்ட ஒற்றை அறையாக அமைந்துள்ளது.


 ஃபேஸ்புக் சேவையின் மைய குறிக்கோளான சமூக உணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை தளத்தை திறந்த வெளி தன்மையுடன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே அறையில் பணியாற்றக்கூடிய வகையில் உருவாக்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பார்க்(Mark jakkarpark ), தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இதன் மாடியில் 9 ஏக்கர் பசுமை பரப்பு உள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பூங்காவில் நடப்பது போல அலுவலக மாடியில் காலாற நடக்கலாம்.

இங்கு கஃபே உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. 

இந்த அலுவலகத்தில் கலைப்படைப்புகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
ஃபேஸ்புக்கின் தற்போதைய தலைமை அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில், ஊழியர்கள் இந்த புதிய அலுவலகத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளனர். 

கலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகத்தின் புகைப்படங்கள் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. -