ஃபேஸ்புக்கின் புதிய அலுவலகம்..

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் வியக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியாவில்(California) உள்ள மென்லோ பார்க்கில்(Menlo Park)சமூக வலைப்பின்னல் சேவை வழங்கும் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2012 ல் புதிய தலைமை அலுவலகத்தை உருவாக்கும் பணியை தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் பிரான்க் ஜெரி(Frank Gehry) இந்த அலுவலகத்துக்கான வடிவமைப்பை உருவாக்கினார். 


தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் 22 ஏக்கர் பரப்பில் 4,30,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இதன் கீழ் தளம், தனி அறைகள் இல்லாமல் பிரம்மாண்ட ஒற்றை அறையாக அமைந்துள்ளது.


 ஃபேஸ்புக் சேவையின் மைய குறிக்கோளான சமூக உணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை தளத்தை திறந்த வெளி தன்மையுடன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே அறையில் பணியாற்றக்கூடிய வகையில் உருவாக்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பார்க்(Mark jakkarpark ), தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இதன் மாடியில் 9 ஏக்கர் பசுமை பரப்பு உள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பூங்காவில் நடப்பது போல அலுவலக மாடியில் காலாற நடக்கலாம்.

இங்கு கஃபே உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. 

இந்த அலுவலகத்தில் கலைப்படைப்புகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
ஃபேஸ்புக்கின் தற்போதைய தலைமை அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில், ஊழியர்கள் இந்த புதிய அலுவலகத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளனர். 

கலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகத்தின் புகைப்படங்கள் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. - 











புதிய பவர் பேங்க்..

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட் பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை அதன் பேட்டரி சக்தி. எவ்வளவு விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைலாக இருந்தாலும் அதன் பேட்டரி காலம் குறைவாகவே இருக்கிறது. 
இந்த சிக்கலைத் தீர்க்க பல்வேறு பவர் பேங்குகள் தற்போது சந்தையில் விற்பனையில் உள்ளன. ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் 10000mAh அளவு பேட்டரி சக்தி கொண்ட ஜீப் பிஜி 10000 என்ற பவர் பேங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இரண்டு யூஎஸ்பி போர்டுகளுடன் இருக்கும் இந்த பவர் பேங்க் ஒரு எல்ஈடி டார்ச் லைட்டுடன் வருகிறது. எனவே ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும். எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பவர் பேங்க் ஒரு வருட வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. - 




Fast & Furious 7, மரணித்த பின் பால் வாக்கர் மீண்டும் நடித்தது எப்படி?

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 திரைப்படம் படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் உயிரழந்தது அனைவரும் அறிந்ததே, அதன் பின் அவர் நடிக்க வேண்டிய பல காட்சிகள் படமாக்கப்பட இருந்தது பழைய செய்தி. சமீபத்தில் வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகின்றது. இதில் பால் வாக்கர் முழு திரைப்படத்தில் காட்சியளிப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு பல சந்தேகங்களுக்கும் வழி வகுக்கின்றது. இந்நிலையில் இறந்த பால் வாக்கர் திரைப்படம் முழுவதிலும் நடித்து எப்படி என்று தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..


டிஜிட்டல் 
பால் வாக்கர் இறந்த பின் மீதம் இருக்கும் காட்சிகளில் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.



நிறுவனம் 
பீட்டர் ஜாக்சனின் WETA நிறுவனம் இப்பணிகளை செய்ததாக கூறப்பட்டாலும் இது குறித்து கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது.



கதாபாத்திரம் 
பல திரைப்படங்களில் இறந்த நடிகர்களின் டிஜிட்டல் உருவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே முறை இப்படத்திலும் பின் பற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.




தம்பி
பால் வாக்கரின் எடுக்கப்படாத காட்சிகளில் அவரது தம்பி கலெப் மற்றும் கோடி நடித்திருப்பதாகவும், சரியான கேமரா கோணம் மற்றும் லைட்டிங் மற்றும்  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு பால் வாக்கரை உருவாக்கியிருக்கின்றனர். 



க்ளாடியேட்டர் 
ஆலிவர் ரீட் க்ளாடியேட்டர் திரைப்படத்திற்காக டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டார். இதே முறை பல ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



வளர்ச்சி 
மரணித்த ஒருவரை மீண்டும் திரையில் காண்பிக்கும் அளவு இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது பெருமைப்பட வேண்டிய விஷயமாகவே இருக்கின்றது. 

ஒரே நாளில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்தது சியோமி..

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஒரே நாளில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து கின்னஸ் உலக சாதனையை படைத்திருக்கின்றது. இது குறித்து சியோமி தரப்பில், எம்ஐ ரசிகர் விழாவில் 24 மணி நேரத்தில் 21.1 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்தது


இந்நிறுவனம் ப்ளாஷ் விற்பனை திட்டத்தின் மூலம் Mi.com இணையத்தில் விற்பனையை நடத்தி வருகின்றது. சில சமயங்களில் கருவிகளின் ஸ்டாக் இல்லை என்ற தகவலும் இந்த தளத்தில் காணப்படும், இருந்தும் அதன் பாதிப்பு பெரிதாக இருக்காது. இதற்கு முன் ஆப்பிள் நிறுவனம் சுமார் 10 லட்சம் ஐபோன் 6 மற்றும் ஐபோன்6 ப்ளஸ் வகைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.


ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்தது



ஸ்மார்ட்போன்களை தவிற சியோமி நிறுவனம் 770,000 ஸ்மார்ட் கருவிகள், 247,000 பவர் ஸ்ட்ரிப்ஸ், 208,000 பிட்னஸ் வாட்ச்கள், 79,000 வைவை யுனிட் மற்றும் 38,000 ஸ்டார்ட் டிவிகளையும் விற்பனை செய்துள்ளது.

MP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க..

இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி






மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.






பின் தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.






பின் எந்த பாடலோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.






அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add cover பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.






குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் செட் செய்யப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.






தொழில்நுட்பம் என்றால் இப்படி தான் இருக்கனும், எப்படினு பாருங்க..

இன்று தொழில்நுட்பம் ஏழை மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம், கீழ் வரும் ஸ்லைடர்களில் உங்களை ஆச்சர்யமூட்டும் சில எளிய தொழில்நுட்ப கருவிகளை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..



1. வெல்லோ வாட்டர் வீல் 
இந்த எளிய கருவியில் 50 லிட்டர் தண்ணீரை தூக்காமல் உருட்டி கொண்டே செல்லலாம்.





2.  விளக்கு 
லூசி சூரிய சக்தி மூலம் எரியும் இந்த விளக்கு பார்க்கவும் அழகாக இருக்கின்றதா.




3. சாக்கெட் 
பார்க்க கால்பந்து போல் காட்சியளிக்கும், இதை கொண்டு உண்மையில் கால்பந்து விளையாடலாம், விளையாடி முடித்த பின் இதில் இருந்து மின்சாரத்தை எடுத்து கொள்ள முடியும் என்றால் நம்ப முடிகின்றதா.




4. லைஃப் ஸ்ட்ரா 
போர்ப்ஸ் பத்திரிக்கையின் மூலம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தொழில்நுட்ப கருவிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த குச்சி, எவ்வித நீரையும் சுத்திகரிக்கும். இந்த குச்சி தன் வாழ்நாளில் 1000 லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.




5. க்யூ டிரம் 
வெல்லோ போன்று இதில் அதிக பட்சம் 50 லிட்டர் நீரை வைத்து கொள்ளலாம். மேலும் இதில் நீரை பாதுகாக்கவும் முடியும்.




6. கண்ணாடி 
சிலிக்கான் ஃப்ளூயிட் கொண்டிருக்கும் இந்த கண்ணாடிகள் துள்ளியமான பார்வைக்கு வழிவகுக்கின்றது.


7. லாப்டாப் 
உலகில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு விலை குறைந்த லாப்டாப்கள் வடிவமைக்கப்படுகின்றன.


8. ஆடை 
பிறந்த குழந்தைகளின் உடல் வெப்ப நிலையை சீராக வைக்க எம்ப்ரேஸ் இன்பான்ட் வார்மர் என்ற கருவி உதவுகின்றது.