பிரபல நிறுவனங்களின் லோகோக்களில் மறைந்திருக்கும் அர்த்தங்கள்.

இன்று பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் லோகோவில் மறைந்திருக்கும் அர்த்தங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். உலகில் பிரபலமாக இருக்கும் சில தொழில்நுட்ப நிறுவனங்களின் லோகோ பற்றி பாருங்கள்..



சிஸ்கோ 
சிஸ்கோ நிறுவனத்தின் லோகோவில் அலைகள் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும், இது அந்நிறுவனம் அமைந்திருக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரின் கோல்டன் கேட் ப்ரிட்ஜ் இடத்தை குறிக்கின்றது.


பீட்ஸ் 
ஆங்கிலத்தில் சிறிய பி வார்த்தை போன்று இருந்தாலும் இது பார்க்க ஹெட்போன்களை போல் காட்சியளிக்கும்.



சன் மைக்ரோசிஸ்டம்ஸ் 
இந்நிறுவனத்தின் லோகோவில் பல வடிவங்கள் மறைந்திருக்கின்றது. அவைகளை பல கோணங்களில் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சன் என்ற வார்த்தை தான் தெரியும்.


அமேசான் 
பெரிதாக எதுவும் இந்த லோகோவில் இல்லை என்ராலும், அதில் இருக்கும் மஞ்சள் நிற அம்பு குறி முன்னேறுவதை காட்டுகின்றது.

உபுன்ட்டு 
பார்க்க வட்டமாக இருந்தாலும் மேல் இருந்து பார்க்கும் போது மூன்று பேர் கை கோர்த்து இருப்பதை போன்று தெரியும்.



பிக்காஸா 
இந்த லோகோவில் கேமரா ஷட்டர் மற்றும் அதனுள் வீடு ஒன்றும் இருக்கும்



பின்டெரஸ்ட் 
இந்த லோகோவில் இருக்கும் பி என்ற ஆங்கில வார்த்தையை நன்கு பாருங்கள், அதில் லோகோவின் அர்த்தம் மறைந்திருக்கின்றது.


பேஸ்புக் ப்ளேசஸ் 
இதன் லோகோவை நன்கு பார்க்கும் போது அதில் பெரிய அளவிலான 4 என்ற எண் மறைந்திருக்கும்



ஜெல்லி 
பார்க்க ஜெல்லி மீன்களை போன்று இருக்கின்றதா, ஆனால் அவற்றை உற்று பாருங்கள் அது பார்க்க மூளை போன்று இருக்கும்.




கேம்க்யூப்
ஆங்கில வார்த்தையான ஜி மற்றும் க்யூப் வடிவமும் இந்த லோகோவில் இருக்கின்றது.




Lollipop அப்டேட் செய்யாமலேயே Lollipop பயன்படுத்துங்கள்.

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை லாலிபாப் அப்டேட் செய்ய இருக்கின்றீர்களா, வேண்டாம் என்கின்றது இந்த செயலி. இதை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தால் போன் பார்க்க லாலிபாப் அப்டேட் செய்ததை போன்று தெரியும்.

இந்த செயலியை கொண்டு லாலிபாப் அப்டேட் செய்யாமல் லாலிபாப் பயன்படுத்தலாம்


ஆன்டிராய்டு டெவலப்பர்களான LL ஆப் க்ரூப் நிறுவனம் சமீபத்தில் தங்களது செயலியை அப்டேட் செய்துள்ளனர், இது எல் லான்ச்சரின் அடுத்த வடிவமாகும். 

இந்த செயலியை கொண்டு லாலிபாப் அப்டேட் செய்யாமல் லாலிபாப் பயன்படுத்தலாம்


இதற்கு முன்னர் வெளியான லான்ச்சர்களை விட இது சிறப்பாக இருக்கின்றது. மேலும் இது இலவசமாக கிடைக்கின்றது. இதை இன்ஸ்டால் செய்ய ஸ்மார்ட்போனை ரூட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. 

இந்த செயலியை கொண்டு லாலிபாப் அப்டேட் செய்யாமல் லாலிபாப் பயன்படுத்தலாம்

இந்த செயலியை பிதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள். இந்த செயலியை இன்ஸ்டால் செய்த பின் உங்க போனில் லாலிபாப் அப்டேட் செய்யப்பட்டதை போன்றுகாட்சியளிக்கும்.

இந்த செயலியை கொண்டு லாலிபாப் அப்டேட் செய்யாமல் லாலிபாப் பயன்படுத்தலாம்

இதன் சில சிறப்பம்சங்களை பயன்படுத்த குறிப்பிட்ட ஆன்டிராய்டு ஓஎஸ் உங்களது போனில் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தாண்டு வெளியீடுகள்..

கடந்தாண்டு காலாண்டு லாபத்தில் ஆப்பிள் நிறுவனம் 74.6 பில்லியன் டாலர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஐபோன் 6, மேக் மற்றும் ஆப் ஸ்டோர் செயளிகளை கூறலாம். விற்பனையிலும் இந்நிறுவனம் 74.5 மில்லியன் கருவிகளை விற்று சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் வெளியானதில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல் இந்த விவரங்கள் சந்தை வல்லுன்ரகளை ஆச்சர்யப்படுத்தியிருப்பதோடு இந்நிறுவனம் வெளியிட இருக்கும் கருவிகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு வெளியிட இருக்கும் கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. 

ஆப்பிள் வாட்ச் 
ஆப்பிள் வாட்ச் கருவிகள் இந்தாண்டு அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் 1.5 முதல் 1.7 இன்ச் வரை ஸ்கிரீன் இருக்கும் என்றும் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் போர்ஸ் டச் என்ற புதிய அம்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.



டேப்ளெட் 
12.2 முதல் 12.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் ப்ரோ அல்லது ஐபேட் ப்ளஸ் வால்யூம் பட்டன், லாக் பட்டன் ஆகியவற்றோடு டச் ஐடி கேபாசிட்டிவ் பட்டன் ஆகியவை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.




ஐபேட் ஏர் ப்ளஸ் 
மெலிதாக இருக்கும் மற்றொரு ஐபேட் ஏர் டேப்ளெட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 4ஜிபி ராம் மற்றும் ஏ9 சிப் பயன்படுத்தப்படலாம் என்பதோடு இது ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.




ஐபேட் மினி 4 
அதிவேக பிராசஸர் , டச் ஐடி மற்றும் சிறந்த கேமரா கொண்ட ஐபேட் மினி 4 இந்தாண்டு வெளியாகலாம்.



ஐபோன் 7 
ஆப்பிள் வழக்கப்படி இந்தாண்டு செப்டம்பரில் புதிய ஐபோன் 7 வெளியாகலாம், இதில் 3டி டிஸ்ப்ளே மற்றும் அதிக கேமரா அம்சங்கள் இருக்கலாம்.




ஐபோன் 6 மினி 
ஐபோன் 6 எஸ் வடிவமைப்பில் ஐபோன் 6 மினி வெளியாகும் என்று கூறப்படுகின்றது.



ஐஓஎஸ் 9 
ஆப்பிள் நிறுவனம் தனது மென்பொருளை அப்டேட் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் விரைவில் ஐஓஎஸ் 9 வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.




ஓஎஸ் எக்ஸ் 
ஆப்பிள் நிறுவனம் புதிய வகை ஓஎஸ் எக்ஸ் மென்பொருளை இந்தாண்டு வெளியிடும் என்று கூறப்படுகின்றது.




மேக்புக் ஏர் 
ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் இந்தாண்டு வெளியாகும் என்றும் இது 12 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.



ஐமேக் 
ப்ராட்வெல் பிராசஸர் கொண்ட 27 இன்ச் ரெட்டினா ஐமேக் இந்தாண்டின் மத்தியில் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆச்சர்யப்பட வைக்கும் டாப் 10 தொழில்நுட்ப சாதனங்கள் 2015.

ஸ்மார்ட் காலர் 
செல்ல பிரானிகளை கண்கானிக்க செயளி வந்து விட்டது. படத்தில் காணப்படும் காலர் போனில் செயளியுடன் இனைக்கப்படும். பின் உங்கள் செல்ல பிரானி செல்லும் இடம் அவை செய்யும் அனைத்து காரியங்களையும் கண்கானிக்க முடியும். இந்த ககுவி வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.




டேஷ் ஸ்மார்ட் கார் ஆப் 
உங்களது காரின் ஒரு கருவியாக டேஷ் இருக்கும். இந்த கருவி உங்களது காரில் பொருத்தப்பட்ட பின் உங்கள் காரில் ஏற்படும் பிரச்சனைகளை துள்ளியமாக எடுத்துரைக்கும்.




ஸ்மார்ட் நேவிஜேட்டர் 
கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த கருவி திருப்ப வேண்டிய திசைகளை சரியாக எடுத்து காட்டும். இது எல்ஈடி விளக்குகள், மற்றும் ப்ளூடூத் இணைப்பை கொண்டு இயங்குகின்றது.




கூகுள் க்ரோகாஸ்ட் 
இந்த கருவியை உங்கள் கணினி அல்லது லாப்டாப்களில் பொருத்தி தொலைகாட்சி சேனல்கலை பார்க்க முடியும்.




வயர் இல்லா ஸ்பீக்கர்கள் 
ப்ளூடூத் மூலம் இயங்கும் இந்த ஸ்பீக்கர்களில் வயரே இல்லை என்றாலும் மற்ற ஸ்பீக்கர்களை போன்று சிறப்பாகவே இயங்கும்.




முக்கோன ஸ்பீக்கர்கள் 
ஏத்தர் கோன் மற்ற ஸ்பீக்கர்களை விட அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.




ஹெட்போன்கள் 
இந்த ஹெட்போன்களில் வியர்வை மற்றும் அசைவுகளை தாங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.




ஸ்மார்ட் விளக்குகள் 
முற்றிலும் இணையம் மூலம் இயங்கும் இந்த விளக்குகளை ஒரு முறை பொருத்திவிட்டால் பின் 22 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.




பாக்ஸ் 
வைபை மூலம் இணைத்து நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் ஹாக் செய்யப்படும் அபாயம் இருக்கின்றது. அவைகளை பாதுகாக்க கண்டறியப்பட்ட முதல் சாதனம் இது தான்.




ஸ்மார்ட் பேன்ட் 
டிஸ்னி நிறுவனத்தின் RFID மேஜிக் பட்டையை நீங்கள் தங்கும் அறை சாவி, பூங்காவின் நுழைவு சீட்டு என பல்வேறு இடங்களில் பயன்படுத்தலாம்.