உள்ளுர் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான வர்த்தக முத்திரையான E-tel இந்த முத்திரையின் முதலாவது Quad core புரோஸஸர் கொண்ட தொலைபேசிகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதன் மூலம் கையடக்க தொலைபேசிகளின் வேக வரிசையை தொடக்கி வைத்துள்ளது.
E-tel curiosity N3 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வந்துள்ளன. இது அதி நவீன மீடியா டெக் சுபர் பாஸ்ட் 1.3கெகாஹெட்ஸ் வேகச் செயற்பாட்டுடன் அன்ட்ரோயிட் 4.2ஜெலி பீன் செயற்பாட்டு பொறிமுறையுடன் அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு மிக மிக அதி வேகமான செயற்பாட்டை இது வழங்குகின்றது. ஸ்மார்ட்போன் செயற்பாடுகளில் இதை ஒரு மைல் கல்லாகக் கருத முடியும் என்று இந்த போன்களை அறிமுகம் செய்யும் Brantel நிறுவனம் அறிவித்துள்ளது.
இரட்டை சிம்களுடன் கூடிய மிக மெல்லிய கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இந்த தொலைபேசிகள் மைக்ரோ சிம் தளம் ஒன்றையும் கொண்டுள்ளன. HSPA> Wi-Fi / Wi-Fin ஹொட்ஸ்பொட், 4.5 அங்குல 16M வர்ண இணைப்புடன் தொடுகை முறையிலான IPS காட்சி வடிவத்தையும் கொண்டுள்ளன. பிலாஷ் உடன் கூடிய 8 MP தன்னியக்க தூர சீராக்கி பின் இணைப்பு கெமரா, புநழ-வயபபiபெ மற்றும் முகத்தை கொண்டு அடையாளம் காணும் வசதி, 2 MP முன் இணைப்பு கெமரா, என்பனவற்றையும் இது உள்ளடக்கியதாகும். இந்த வசதிகள் E-tel curiosity N3 தொலைபேசிகளை அதிநவீன பல்துறை வசதிகொண்ட தொலைபேசிகளாக்கியுள்ளன. தற்போது சந்தையில் உள்ள மிகவும் பிரபலமான முன்னணி ஸ்மார்ட்போன் வகைகளோடு; போட்டிமிக்க ஒரு அறிமுகமாகவும் இது மாறியுள்ளது என்று கம்பனி அறிவித்துள்ளது.
´curiosity N3 போன் வகைகள் சந்தையில் ஒரு பாரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம்´ என Brantel நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பிஷ்ரி லத்தீப கூறினார். ´இதன் அதிசயிக்கத்தக்க விலையான 21900 ரூபா என்பதே இதை வெற்றிபெற வைக்கும் முக்கிய காரணியாக அமையும் எனவும் சிறந்த பண்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் வகைகளின் விலைகளுள் இது மிகச் சிறந்ததாக இருக்கின்றது´ என அவர் மேலும் கூறினார்.
E-tel போன்கள் Hong Kong ல் வடிவமைக்கப்பட்டு சீனாவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மூன்று உற்பத்தி நிலையங்களில் அவை தயாரிக்கப்படுகின்றன. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த பத்து முக்கிய உற்பத்தி நிலையஙகளின் வரிசையில் இடம் பிடித்துள்ள உற்பத்தி நிலையங்களாகும். அந்த நாடுகளுக்கான அதே உற்பத்தித் தரங்களுக்கு ஏற்ப இங்கு எல்லா உற்பத்திகளும் மேற் கொள்ளப்படுகின்றன. E-tel இன் மிகவும் முக்கியமான ஒரு ஸ்திரப்பாடு எதுவெனில் உலகளாவிய வர்த்தக முத்திரை சமநிலையைப் பேணி விலையை ஒரு பொருட்டாகக் கருதாது நியாயமான விலையில்; அதி நவீன தொழில்நுட்பத்தை வழங்கக் கூடிய அதன் பண்பாகும் என்று அவர் மேலும் விளக்கினார்.
E-tel curiosity N3 போன்களின் நினைவாற்றலை மைக்ரோ SD கார்ட் மூலம் 32 GB வரை விஸ்தரிக்கலாம். இதில் உள்ள 3G,Wi Fi புளுடூத், வசதிகள் மூலம் ஸ்கைப், யுடியூப், பேஸ்புக், ஜிமெயில், கூகுள் செட் என எல்லா வகையான சமூக இணையத் தளங்களோடும் தொடர்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு கூகுள் வரைபடமும் இதனோடு இணைக்கப்பட்டுள்ளதால் GPS வசதிகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எண்ணற்ற ஏனைய பல விடயங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இலங்கை முழுவதும் சுமார் இரண்டாயிரம் வர்த்தக விநியோக நிலையங்கள் மூலம் E-tel உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும். மேலும் கொழும்பு, அநுராதபுரம், கண்டி, மாத்தறை, நீர்கொழும்பு, குருணாகல்,மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு இடங்களில் Brantel நிறுவன நிலையங்களுடாக விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
Brantel நிறுவனம் இலங்கையில் 2004 முதல் செயற்படுகின்றது. 2008ல் அது E-tel வர்த்தக முத்திரை உற்பத்திகளை அறிமுகம் செய்தது. E-tel முத்திரையின் கீழ் பல்வேறு வகையான போன்கன் உள்ளன. ஸ்மார்ட்போன் உற்பத்திகளுள் பிரபலமான பல உற்பத்திகளோடு போட்டியிட்டு E-tel சந்தையில் தனக்கென கணிசமான ஒரு இடத்தையும் பிடித்துள்ளது. உள்ளுர் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான வர்த்தக முத்திரையான E-tel இந்த முத்திரையின் முதலாவது Quad core புரோஸஸர் கொண்ட தொலைபேசிகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதன் மூலம் கையடக்க தொலைபேசிகளின் வேக வரிசையை தொடக்கி வைத்துள்ளது.
E-tel curiosity N3 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வந்துள்ளன. இது அதி நவீன மீடியா டெக் சுபர் பாஸ்ட் 1.3கெகாஹெட்ஸ் வேகச் செயற்பாட்டுடன் அன்ட்ரோயிட் 4.2ஜெலி பீன் செயற்பாட்டு பொறிமுறையுடன் அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு மிக மிக அதி வேகமான செயற்பாட்டை இது வழங்குகின்றது. ஸ்மார்ட்போன் செயற்பாடுகளில் இதை ஒரு மைல் கல்லாகக் கருத முடியும் என்று இந்த போன்களை அறிமுகம் செய்யும் Brantel நிறுவனம் அறிவித்துள்ளது.
இரட்டை சிம்களுடன் கூடிய மிக மெல்லிய கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இந்த தொலைபேசிகள் மைக்ரோ சிம் தளம் ஒன்றையும் கொண்டுள்ளன. HSPA> Wi-Fi / Wi-Fin ஹொட்ஸ்பொட், 4.5 அங்குல 16M வர்ண இணைப்புடன் தொடுகை முறையிலான IPS காட்சி வடிவத்தையும் கொண்டுள்ளன. பிலாஷ் உடன் கூடிய 8 MP தன்னியக்க தூர சீராக்கி பின் இணைப்பு கெமரா, புநழ-வயபபiபெ மற்றும் முகத்தை கொண்டு அடையாளம் காணும் வசதி, 2 MP முன் இணைப்பு கெமரா, என்பனவற்றையும் இது உள்ளடக்கியதாகும். இந்த வசதிகள் E-tel curiosity N3 தொலைபேசிகளை அதிநவீன பல்துறை வசதிகொண்ட தொலைபேசிகளாக்கியுள்ளன. தற்போது சந்தையில் உள்ள மிகவும் பிரபலமான முன்னணி ஸ்மார்ட்போன் வகைகளோடு; போட்டிமிக்க ஒரு அறிமுகமாகவும் இது மாறியுள்ளது என்று கம்பனி அறிவித்துள்ளது.
´curiosity N3 போன் வகைகள் சந்தையில் ஒரு பாரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம்´ என Brantel நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பிஷ்ரி லத்தீப கூறினார். ´இதன் அதிசயிக்கத்தக்க விலையான 21900 ரூபா என்பதே இதை வெற்றிபெற வைக்கும் முக்கிய காரணியாக அமையும் எனவும் சிறந்த பண்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் வகைகளின் விலைகளுள் இது மிகச் சிறந்ததாக இருக்கின்றது´ என அவர் மேலும் கூறினார்.
E-tel போன்கள் Hong Kong ல் வடிவமைக்கப்பட்டு சீனாவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மூன்று உற்பத்தி நிலையங்களில் அவை தயாரிக்கப்படுகின்றன. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த பத்து முக்கிய உற்பத்தி நிலையஙகளின் வரிசையில் இடம் பிடித்துள்ள உற்பத்தி நிலையங்களாகும். அந்த நாடுகளுக்கான அதே உற்பத்தித் தரங்களுக்கு ஏற்ப இங்கு எல்லா உற்பத்திகளும் மேற் கொள்ளப்படுகின்றன. E-tel இன் மிகவும் முக்கியமான ஒரு ஸ்திரப்பாடு எதுவெனில் உலகளாவிய வர்த்தக முத்திரை சமநிலையைப் பேணி விலையை ஒரு பொருட்டாகக் கருதாது நியாயமான விலையில்; அதி நவீன தொழில்நுட்பத்தை வழங்கக் கூடிய அதன் பண்பாகும் என்று அவர் மேலும் விளக்கினார்.
E-tel curiosity N3 போன்களின் நினைவாற்றலை மைக்ரோ SD கார்ட் மூலம் 32 GB வரை விஸ்தரிக்கலாம். இதில் உள்ள 3G,Wi Fi புளுடூத், வசதிகள் மூலம் ஸ்கைப், யுடியூப், பேஸ்புக், ஜிமெயில், கூகுள் செட் என எல்லா வகையான சமூக இணையத் தளங்களோடும் தொடர்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு கூகுள் வரைபடமும் இதனோடு இணைக்கப்பட்டுள்ளதால் GPS வசதிகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் எண்ணற்ற ஏனைய பல விடயங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இலங்கை முழுவதும் சுமார் இரண்டாயிரம் வர்த்தக விநியோக நிலையங்கள் மூலம் E-tel உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும். மேலும் கொழும்பு, அநுராதபுரம், கண்டி, மாத்தறை, நீர்கொழும்பு, குருணாகல்,மற்றும் இரத்தினபுரி ஆகிய ஏழு இடங்களில் Brantel நிறுவன நிலையங்களுடாக விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
Brantel நிறுவனம் இலங்கையில் 2004 முதல் செயற்படுகின்றது. 2008ல் அது E-tel வர்த்தக முத்திரை உற்பத்திகளை அறிமுகம் செய்தது. E-tel முத்திரையின் கீழ் பல்வேறு வகையான போன்கன் உள்ளன. ஸ்மார்ட்போன் உற்பத்திகளுள் பிரபலமான பல உற்பத்திகளோடு போட்டியிட்டு E-tel சந்தையில் தனக்கென கணிசமான ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.